Jimmy: ஆர்.ஆர்.ஆர் பாலிவுட் படமா? ஆஸ்கர் தொகுப்பாளர் மீது கோபத்தில் ரசிகர்கள்
Mar 13, 2023, 12:17 PM IST
ஆஸ்கர் விருது தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் ஆர்.ஆர்.ஆர் படத்தை பாலிவுட் படம் என கூறியதால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்று உள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் என்ற சாதனையை நாட்டு நாட்டு பாடல் செய்து இருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி கெம்மல், ஆர். ஆர். ஆர். ஒரு பாலிவுட் படம் என்றார் . இதனால் தென்னிந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இந்திய சினிமா என்றால் பாலிவுட் அல்ல, மற்ற மொழிகளும் என நெட்டிசன்கள் அவரை வசைப்பாடி வருகின்றனர்.
ஆர்.ஆர்.ஆர். ஒரு தெலுங்கு படம் என்பது ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கியவருக்கு தெரியாதா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைப் பற்றி அறிமுகம் செய்து வைத்த தீபிகா படுகோனே, “ நாட்டு நாட்டு பாடல் இந்தியர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்ட 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் தெலுங்கில் வந்தது. நாட்டு நாட்டு பாடல் உங்களுக்குத் தெரியாவிட்டால் இப்போது தெரியும்” என்றார்.
ஆஸ்கர் மேடையில் கால பைரவாவும், ராகுல் சிப்லிகஞ்சும் பாடி, நடனமாடிய பிறகு அரங்கத்தில் இருந்த பிரபலங்கள் அனைவரும் நின்று கைதட்டினர். ஓரிரு நிமிடங்கள் நின்று கைதட்டல் பெறப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்