Ethirneechal: ‘பட்டுனு போட்ட பட்டம்மா.. பொட்டுனு போட்ட கதிர்’ யார் தலைக்கு ஆபத்து?
Aug 20, 2023, 06:16 PM IST
ஜீவானந்தத்தை யார் சுடுவது என்கிற போட்டி ஏற்படுகிறது. வழக்கம் போல கதிர் முந்திரி கொட்டை மாதிரி முந்த. வளவனுக்கும் கதிருக்கும் ஒரே சண்டை.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 40 % ஷேரை ஜீவானந்தம் அபகரித்ததாக நினைத்த நேரத்தில், அதை வைத்திருந்த பாட்டி பட்டம்மா சிகிச்சையிலிருந்த எழுந்துவிட்டார்.
ஜீவானந்ததத்தை போட்டுத்தள்ள வளவன் தலைமையில் அனுப்பிய ஆட்கள், கவுஞ்சியில் ஒன்று கூடிவிட்டனர். மனைவி மகளை பார்க்க வந்த ஜீவானந்தத்தை அவர்கள் சுற்றி வளைக்கிறார்கள். ஏற்கனவே ஜீவானந்த்தை தேடி அங்கு வரும் ஜனனியும், அந்த களேபரத்தில் இணைகிறார். வீட்டுக்குள் புகுந்து மனைவி, மகளோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஜீவானந்தத்தை வளவன் ஆட்கள் தாக்குகிறார்கள். இதில் ஜனனியும் உள்ளே புகுந்துள்ள நிலையில், நேற்றைய எபிசோடில் கீழே வீசப்பட்ட ஜீவானந்தத்தின் துப்பாக்கி வேறு வெளியே கிடக்கிறது.
ஜீவானந்தத்தை யார் சுடுவது என்கிற போட்டி ஏற்படுகிறது. வழக்கம் போல கதிர் முந்திரி கொட்டை மாதிரி முந்த. வளவனுக்கும் கதிருக்கும் ஒரே சண்டை. அதுவும் கையில் தூப்பாக்கியோடு நடக்கிறது. இந்த நேரத்தில் திடீரென துப்பாக்கி வெடிக்கிறது. குண்டு பாய்ந்தது ஜீவானந்தம் மேலா? ஜனனி மேலா? அல்லது ஜீவானந்தத்தின் மனைவி மேலா? என்கிற சஸ்பென்ஸ் உடன் இன்றைய எபிசோடு போகிறது.
அதே போல, வீட்டில் சொத்து விவகாரத்தில் பட்டம்மாள் பாட்டியை கையெழுத்துப் போட வற்புறுத்துகிறார் குணசேகரன். அதற்கு மறுக்கும் பட்டம்மாள். ஜீவானந்த்தை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். அதனால் குணசேகர் ப்ரஷர் எகிறுகிறது. வீட்டிலும் நடக்கும் களேபரமும், கவுஞ்சியில் நடக்கும் போர்களமும் தான் இன்றைய எபிசோடு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்