தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Jayam Ravi: ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா?

HBD Jayam Ravi: ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா?

Manigandan K T HT Tamil

Sep 10, 2023, 05:00 AM IST

google News
இவர் சென்னையிலும், ஐதராபாத்திலும் வளர்ந்தார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரில் பட்டம் பெற்றார்.
இவர் சென்னையிலும், ஐதராபாத்திலும் வளர்ந்தார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரில் பட்டம் பெற்றார்.

இவர் சென்னையிலும், ஐதராபாத்திலும் வளர்ந்தார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரில் பட்டம் பெற்றார்.

நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் இன்று. இவர் ஒரு பிலிம்பேர் விருது மற்றும் மூன்று சைமா விருதுகளை வென்றுள்ளார். திரைப்பட எடிட்டர் மோகனின் மகனான ரவி, தனது தந்தை தயாரித்த ஒரு தொட்டில் சபதம் (1989) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஜெயம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

இவரது சகோதரர் பிரபல இயக்குநர் மோகன் ராஜா. இவர் தான் ஜெயம் படத்தை இயக்கியிருந்தார். அவரது இயக்கத்திலேயே ஜெயம் ரவி தெடார்ந்து சில படங்களில் நடித்தார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருவரின் காம்போவில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன.

ஜெயம் ரவி மதுரை திருமங்கலத்தில் 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார். இவர் சென்னையிலும், ஐதராபாத்திலும் வளர்ந்தார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரில் பட்டம் பெற்றார்.

12 வயதிலேயே பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்து அரங்கேற்றம் நிகழ்த்தியிருக்கிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்ததால் திரைப்படத்திற்கு வந்தார். மும்பையில் பிரபல நடிப்புப் பயிற்சி மையத்தில் நடிப்புக் கலையை கற்றுத் தேர்ந்தார். கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியான பேராண்மை, நிமிரந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் என பல படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்தன.

பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது தனி ஒருவர் படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி