தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிகினி உடை இவ்வளவு காஸ்ட்லியா… ரசிகர்கள் ஷாக்!

பிகினி உடை இவ்வளவு காஸ்ட்லியா… ரசிகர்கள் ஷாக்!

Aarth V HT Tamil

Feb 17, 2022, 12:43 PM IST

google News
நடிகை பூஜா ஹெக்டே மாலத்தீவில் அணிந்திருந்த பிகினி விலை குறித்த தகவல் கிடைத்துள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே மாலத்தீவில் அணிந்திருந்த பிகினி விலை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே மாலத்தீவில் அணிந்திருந்த பிகினி விலை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நட்சத்திரங்கள் பலரும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் வெளியே சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக விடுமுறை நாள்கள் என்றாலே நடிகைகள் மாலத்தீவில் சென்று நேரத்தை கழிக்கின்றனர்.

விடுமுறை நாள் மட்டுமின்றி பிறந்தநாள், திருமண நாள், தேன் நிலவு ஆகியவற்றை கூட பிரபலங்கள் மாலத்தீவில் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்துடன் 13 ஆண்டுகள் கழித்து மாலத்தீவுக்குச் சுற்றுலாவுக்காக சென்று இருந்தார். அவர் தற்போது விடுமுறை முடித்து வீடு திரும்பிய பிறகு அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தினமும் தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி டாப் மற்றும் ஷார்ட்ஸ் செட் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அப்புகைப்படத்திற்கு மட்டும் சுமார் ஒன்பது லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் அந்த ஆடையின் விலையை 9,999 ரூபாட் என கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் என்னது இந்த ஆடையின் விலை 9 ஆயிரமா… என வாய் பிளந்தனர்.

ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிக் கொடுக்காத காரணத்தினால் பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டர். தெலுங்கில் இவர் பிரபாஸுடன் இனைந்து நடித்த ராதே ஷியாம் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாக வுள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் அரபிக் குத்து பாடல் வெளியானது. 

சிவகார்த்திகேயன் எழுதிய அப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் இந்த பாடலை பலரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே மாலத்தீவில், ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி