தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திஷா பதானியின் உடற்பயிற்சி ரகசியங்கள்

திஷா பதானியின் உடற்பயிற்சி ரகசியங்கள்

Aarth V HT Tamil

Feb 21, 2022, 11:20 PM IST

google News
உடல் எடையை எப்படி கச்சிதமாக் வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ரசிகர்களுக்கு திஷா பதானி அடிக்கடி டிப்ஸ் கொடுத்து வருகிறார்.
உடல் எடையை எப்படி கச்சிதமாக் வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ரசிகர்களுக்கு திஷா பதானி அடிக்கடி டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

உடல் எடையை எப்படி கச்சிதமாக் வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ரசிகர்களுக்கு திஷா பதானி அடிக்கடி டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

பலரும் தங்களை மிகவும் அழகாகக் காண்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிகமாக நேரத்தை செலவு செய்து வருகின்றனர். பலரும் உடல் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள ஜிம் செல்கின்றனர். சிலர் உணவு முறையில் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் நடிகை திஷா பதானி ஃபிட்னஸ்க்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறார். அத்துடன் உடல் எடையை எப்படி கச்சிதமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார். சொல்ல போனால் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் உடற்பயற்சி சம்பந்தமான புகைப்படங்களும், விடியோக்களும் நிறைந்து இருக்கும். இந்நிலையில் திஷா செய்யும் உடற்பயிற்சியால், நமக்கு கிடைக்கும் நன்மை குறித்து இதில் காண்போம்.

கார்டியா:

கார்டியோவின் ஆற்றலை திஷா ஒருபோதும் புறக்கணித்தே இல்லை. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கார்டியா சம்பந்தமான சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவை தொடர்பான வீடியோ நிறைந்தவையாக உள்ளது.

கார்டியோ இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் சருமம் பளபளப்பாக மாறும். கார்டியோ ஒர்க்- அவுட் என்பது மக்கள் செய்யும் சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும்.

கலோரி குறைப்பு

பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் பலரும் கிக் பாக்ஸிங் செய்து கலோரிகளை குறைப்பதில் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். திஷாவின் கிக் பாக்ஸிங் வீடியோக்கள் ஃபிட்னஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிக் பாக்ஸிங் செய்தால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நடன பயிற்சி

நடனம் ஒரு கலை வடிவமாக இருந்தாலும், அது ஒரு சிறந்த பயிற்சியும் கூட. அதனால் தான் திஷா பதானி அதையும் விடாமல் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நடனமாடி வீடியோவாக வெளியிடுகிறார்.

வலிமை

ஆண்களைப் போலவே பல பெண்களும் ஜிம்மிற்கு சென்று வருகிறார்கள். பெண்கள் கனமான எடைகள் தூக்கினால் ஆபத்து என கூறுவார்கள். ஆனால் அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு திஷா, ஆண்களுக்கு ஈடாக கனமான பொருள்களை ஜிம்மில் தூக்கி தசைகளுக்கு வலு சேர்த்து வருகிறார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி