தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித்தை இயக்கிய நகைச்சுவை நடிகர்… இந்த லிஸ்ட கொஞ்சம் பாருங்க

அஜித்தை இயக்கிய நகைச்சுவை நடிகர்… இந்த லிஸ்ட கொஞ்சம் பாருங்க

Aarth V HT Tamil

Feb 17, 2022, 05:38 PM IST

google News
இயக்குநர்களாக இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய நட்சத்திரங்களைக் குறித்த தொகுப்பைக் காண்போம்.
இயக்குநர்களாக இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய நட்சத்திரங்களைக் குறித்த தொகுப்பைக் காண்போம்.

இயக்குநர்களாக இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய நட்சத்திரங்களைக் குறித்த தொகுப்பைக் காண்போம்.

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் என்றால் நம் நினைவிற்கு வருவது ஷங்கர், மணிரத்னம், வெற்றிமாறன், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மகேந்திரன் உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்களைச் சொல்வோம்.

ஆனால் ஒரு காலத்தில் இயக்குநர்களாக இருந்த பலர் தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த லிஸ்டை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

மனோபாலா

'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', 'ஆகாய கங்கை' என மொத்தம் 23 தமிழ் படங்களையும், 1 இந்தி, கன்னட படத்தையும் இயக்கியுள்ளார் மனோபாலா. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ரஜினி, ராதிகா நடித்த 'ஊர்க் காவலன்' படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது.

பிறகு முழுநேர காமெடி நடிகராக வலம் வரும் மனோபாலா 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது 'பார்ப்போம்' படத்தை இயக்கிவருகிறார்.

ரமேஷ் கண்ணா

ஆரம்பக் காலத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ் படத்தில் பணியாற்றிவந்தார் ரமேஷ் கண்ணா. பிறகு 1999 ஆம் ஆண்டு வெளியான 'தொடரும்' படத்தை இயக்கினார்.

அஜித், தேவயானி நடித்த இப்படம் எதிர்பார்த்த அளவு செல்லாத காரணத்தினால் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டர் ரமேஷ் கண்ணா.

சிங்கம் புலி

சிங்கம் புலி ஒரு காமெடி நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவர் இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து படம் எடுத்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அது வேறுயாரும் இல்லை அஜித் மற்றும் சூர்யா வைத்து 'ரெட்', 'மாயாவி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

'ரெட்' படத்தில் அஜித் பேசிய வசனம் இன்றும் ரசிகர்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜீத் நீதிமன்றத்தில் பேசும் வசனம் மிகவும் அழகாக எடுக்கப்பட்டிருக்கும். 

அதேபோல் 'மாயாவி' படம் சூர்யாவின் திரையுலக பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. இவர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார் குறிப்பிடத்தக்கது.

தம்பி ராமையா

காமெடி, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தம்பி ராமையா. குறிப்பாக 'கும்கி', 'சாட்டை', 'வாகை சூட வா' உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. 

இவர் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்', 'மணியார் குடும்பம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 'மணியார் குடும்பம்' படத்தின் நாயகன் உமாபதி இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா லட்சுமணன்

'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'தீயா வேலை செய்யணும் குமாரு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்ரா லட்சுமணன்.

 குறிப்பாக 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் சந்தானத்துடன் இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் எளிதாகக் கொண்டு சேர்த்தது. இவர் 'சூரசம்ஹாரம்' பெரிய தம்பி' , சின்ன ராஜா' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

ஆர். சுந்தர் ராஜன்

‘நட்புக்காக’, ’சூர்யவம்சம்’, ’மின்சார கண்ணா’ என பல்வேறு படங்களில் நடித்தவர் ஆர். சுந்தர் ராஜன். இவரை நடிகராக பலருக்கும் தெரியும். 

ஆனால் இதுவரை அவர் 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அதில் குறிப்பாக ’ராஜாதி ராஜா’, ‘பயணங்கள் முடிவதில்லை’ , ’வைதேகி காத்திருந்தாள்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதுமட்டுமின்றி இவர் தற்போது தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளிலும், சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீநாத்

விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் 'காதலிக்க நேரமில்லை' தொடர் மூலம் பிரபலமானார். இவர் 'குட்டி', 'ஆடு புலி' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியுள்ளார்.

கடைசியாகச் சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி