தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Vincent: ‘வேண்டவே வேண்டாம் என்ற Sac.. கண்டிப்பா வேண்டும் என்ற விஜய்’ வின்சென்ட் செல்வா ப்ளாஷ்பேக்!

Director Vincent: ‘வேண்டவே வேண்டாம் என்ற SAC.. கண்டிப்பா வேண்டும் என்ற விஜய்’ வின்சென்ட் செல்வா ப்ளாஷ்பேக்!

Apr 21, 2023, 06:00 AM IST

google News
ப்ரியமுடன் பார்த்துவிட்டு, அஜித் சார் அழைத்தார். ‘நான் பண்ணிருக்கணும் செல்வா, இந்த படத்தை’ என்று என்னிடம் கூறினார்.
ப்ரியமுடன் பார்த்துவிட்டு, அஜித் சார் அழைத்தார். ‘நான் பண்ணிருக்கணும் செல்வா, இந்த படத்தை’ என்று என்னிடம் கூறினார்.

ப்ரியமுடன் பார்த்துவிட்டு, அஜித் சார் அழைத்தார். ‘நான் பண்ணிருக்கணும் செல்வா, இந்த படத்தை’ என்று என்னிடம் கூறினார்.

விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தில் அறிமுகமாகி யூத் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த வின்சென்ட் செல்வா, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘இளம் வயதில் எங்கள் வீட்டில் எல்லாரும் சினிமாக்கு போவார்கள். நான் சினிமாவிற்கு போகவே மாட்டேன். என் வீட்டு பக்கத்தில் ஒருவர் கேமரா உதவியாளராக பணியாற்றி கொண்டிருந்தார். அவர் தான் சினிமா பற்றி நிறைய பேசுவார். அவர் பேச்சை கேட்டு தான் சினிமா மீது ஆசை வந்தது. 

எப்படியாவது கேமரா மேன் ஆக வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதற்காக இன்ஸ்ட்யூட் போய் சேர்ந்தேன். அங்கு டைரக்டஷனுக்கு தான் கிடைத்தது. அப்போ ஒரு குறும்படம் எடுத்தேன். அந்த குறும்படத்தை விஜய் சாரிடம் காட்டினேன். அது அவருக்கு பயங்கரமா பிடித்துவிட்டது. 

கதை செல்ல அழைத்தார்கள். விஜய் சார் தான் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார். ‘சார் எனக்கு கதை சொல்லத் தெரியாது, இடைவேளை வரை சொல்றேன், நீங்க ஓகே சொன்னால் எனக்கு வாய்ப்பு தரணும்’ என்றேன். அவர் சிரித்துக் கொண்டே சொல்லுங்க என்றார். நான் சொல்லி முடித்தேன், அவர் ரியாக்‌ஷன் காட்டல. ‘ம்… சொல்லுங்க’ என்று கூறினார். 

‘இரண்டாம் பாதி சொல்லனும்னா, நீங்க படம் தரணும் சார்’ என்று நான் சொல்கிறேன், ‘அட… சொல்லுங்கணா…’ என்றார் விஜய். அப்படி சொல்லிதான் ப்ரியமுடன் கதை ஓகே பண்ணோம். ஒரு பாசிட்டிவ் ஒரு நெகட்டிவ் ரோல். ‘என்னுடைய இமேஜ் பார்க்காத… கதையை பண்ணு’ என்று விஜய் சார் சொல்றார். காதலுக்கு மரியாதை மாதிரி ஹிட் கொடுத்து, பெண்கள் ரசிக்கும் ஹீரோவா விஜய் இருக்கார், அவரை எப்படி நெகட்டிவ் ஹீரோவா காட்டுறது? என்று நான் யோசித்தேன். 

ஆனால் விஜய் சார், அந்த கேரக்டரை பண்ணியேத் தீருவேன் என்று உறுதியா இருக்கார். விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர், செலவை இழுத்துவிட்டுருவார், என்று பல தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டனர். இந்த படத்தை யார் தயாரித்தாலும், அவர்களுக்கு இன்னொரு படம் நான் பண்றேன் என ஆஃபர் எல்லாம் விஜய் கொடுக்கிறார். 

எஸ்.ஏ.சி., இயக்குவதாக இருந்த படத்தை ஒத்தி வைத்து விட்டு, ப்ரியமுடன் படத்தை அந்த தயாரிப்பில் தயாரித்தனர். ‘என்ன வேணாம் பண்ணிக்கோங்க, யாரை வேணும்னாலும் போட்டுக்கோங்க’ என்று விஜய் தாராளமா என் விருப்பத்திற்கு விட்டுட்டார். 

க்ளைமாக்ஸில் விஜய் சாகுற மாதிரி கேரக்டர். எஸ்.ஏ.சி., ஒத்துக்கொள்ளமாட்டேங்கிறார். ‘இது கேரக்டர்ப்பா..’ என்று விஜய் அவரை சமாதானம் செய்கிறார். எஸ்.ஏ.சி., ஒப்புக்கொள்ளவே இல்லை. ஒருவழியாக விஜய் சார் தான், அவரை சம்மதிக்க வைத்தார். 

ப்ரியமுடன் பார்த்துவிட்டு, அஜித் சார் அழைத்தார். ‘நான் பண்ணிருக்கணும் செல்வா, இந்த படத்தை’ என்று என்னிடம் கூறினார். அப்போது வாலி ஷூட்ல இருக்கு. ப்ரியமுடன் வந்திருச்சு. வாலிக்கு முன்னாடியே ப்ரியமுடன் படத்தில் விஜய் நெகட்டிவ் ரோல் பண்ணிட்டாரு,’’
என்று அந்த பேட்டியின் வின்சென்ட் செல்வா கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி