சொர்க்கத்தை அடைய செல்வராகவன் சொல்லும் டிப்ஸ் என்ன தெரியுமா? இதுதாங்க டைரக்டர் பஞ்ச்!
Oct 20, 2024, 08:37 PM IST
வாழ்க்கையில் மனிதர்கள் சொர்க்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் நாளுக்கு நாள் ட்ரெண்ட் செட் செய்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இவர், தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஜானரில் தந்து மக்களை 'அட' போட வைப்பது மட்டுமின்றி, இப்போது தனது அனுபவங்களை தத்துவ வார்த்தைகளாக உதிர்த்து வருகிறார்.
சொர்க்கத்தை அடையும் வழி
அப்படி இன்று செல்வராகவன் உதிர்த்த வார்த்தைகள் தான் சொர்க்கத்தை அடையும் வழி. இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே வாழ்ந்தால் தாழ்ந்துதான் போவீர்கள் ! நேற்றைய நாளை விட இன்று ஒரு துளி வளர்ந்திருந்தால் அதுவே போதும். வாழ்க்கை சொர்க்கம் எனத் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்
மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையை தங்கள் அருகில் இருக்கும் நபருடனோ, அல்லது பிரபலங்களுடனோ ஒப்பிட்டு பார்த்த வண்ணமே இருப்பர். இதனால், அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும். அது அழகாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி.
இப்படி நம்பிக்கை இல்லாமல் நாம் செய்யும் அனைத்து வேலைகளுமே நமக்கு எப்போதும் முன்னேற்றத்தை தராது. நாம் பிறருடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே இருக்காமல் நம் வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது அடையும் சிறிதளவிலான முன்னேற்றம் கூட சொர்க்கம் தான் என அர் கூறியிருக்கிறார்.
தமிழில் செல்வராகவன் திரைப்படம் வருகிறது என்றால் அதை டி-கோடிங் செய்ய நிச்சயம் ஒரு கும்பல் கிளம்பும். காரணம் அவரது திரைப்படத்தில் அத்தனை நுணுக்கங்கள் நிறைந்திருக்கும்.
நுணுக்கமான கலைஞன்
படத்தில் மட்டுமல்ல, தன்னுடைய கருத்திலும் பல்வேறு நுணுக்கமான கருத்துகள் உள்ளது என்பதை சில காலமாக ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார் செல்வராகவன். இயக்குநராக, நடிகராக சினிமாவில் தன்னை நிரூபித்துக் காட்டி இருப்பார் செல்வராகவன்.
தத்துவங்கள்
மக்கள் ஒருபோதும் நல்ல வாழ்க்கையை மதிக்க மாட்டார்கள். அதை தங்களால் இயன்றவரை தேடித்தேடிப் போய் அழித்துவிடுகின்றனர். பின் அதிலிருந்து எப்படி தப்பிப்பது எனவும் முயற்சி செய்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
இவர், பெரும்பாலும் சோசியல் மீடியாவில் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும் அவரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஏற்பட்ட அனுபவங்கள் தான் எனவும் அவர் முன்னதார கூறியிருந்தார்.
புதிய தத்துவம்
முன்னதாக சோசியல் மீடியாவில் அவர், "காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்." என பதிவு செய்திருந்தார்.
அதாவது, இந்த உலகத்தில் உள்ள மக்கள் எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரின் நிலை கண்டு மனம் வருந்தாது. தளராது. எனவே, உன்னை நீயே தேற்றிக் கொண்டு, ஆகும் வேலையை் பார் என்கிறார்.
மொழி பற்றாளன்
முன்னதாக இவர், உலகத்தில் மிகவும் பழைமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. அந்தத் தமிழ் மொழியில் பேசுவதை பெருமையாக நினைத்துக் கொள்ளுங்கள். இதை நான் கெஞ்சி கேட்பதாக நினைத்துக்கொள்ளுங்கள், வேண்டுகோளாக கருதி கொள்ளுங்கள், தயவு செய்து தமிழில் பேசுங்கள். ஆங்கில மொழியின் அவசியம் எனக்கு புரிகிறது. ஆனால், முழு நேரமும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்