தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Balu Mahendra: ‘விஜய்க்கு பூனை முகம்’ பாலுமகேந்திரா சொன்ன ரகசியம் லீக்!

Balu Mahendra: ‘விஜய்க்கு பூனை முகம்’ பாலுமகேந்திரா சொன்ன ரகசியம் லீக்!

Jan 28, 2023, 07:10 AM IST

google News
விஜயை மக்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதை இங்கு பார்க்கலாம். (feliway)
விஜயை மக்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதை இங்கு பார்க்கலாம்.

விஜயை மக்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதை இங்கு பார்க்கலாம்.

விஜயை ஏன் மக்களுக்கு இவ்வளவு பிடிக்கிறது என்பதற்கு இயக்குநர் பாலுமகேந்திரா சொன்ன காரணத்தை பகிர்கிறார் இயக்குநர் சீனுராமசாமி!

தமிழ் சினிமாவிற்கு அடையாளத்தை தேடித்தந்த இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் சீனுராமசாமி. பரத், பாவனி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘கூடல்நகர்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘தென் மேற்கு பருவக்காற்று’படத்தை இயக்கினார். அந்தப்படத்திலேயே நடிகர் விஜய் சேதுபதியையும் அறிமுகப்படுத்தினார். 

இந்தப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ‘நீர் பறவை’ ‘இடம் பொருள் ஏவல்’ ‘தர்மதுரை’ ‘கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவருக்கு இறுதியாக  ‘மாமன்னன்’ படம் வெளியானது. இந்தப்படம் திரையரங்குகளில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட, ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவரிடம் பாலுமகேந்திரா நடிகர் விஜயை பற்றி சொன்ன சுவாரசிய செய்தியை இங்கே பார்க்கலாம்.

இது குறித்து Touring talkies சேனலுக்கு பேசிய அவர்,“பாலுமகேந்திராவிடம் சாரிடம் அம்பாசிடர் கார் ஒன்று இருந்தது. அதில் நானும் அவரும் ஆஃபிஸை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.

பாலுமகேந்திராவின் ஆஃபிஸ் இந்திரா காந்தி தெரு. அங்கே போகும் போது, வலது பக்கம் திரும்பினால் அங்கு நடிகர் விஜயின் வீடு; அதே தெருவில் கடைசி சென்றால் எங்களது ஆஃபிஸ்; நாங்கள் அந்த தெருவில் வந்து கொண்டிருந்த போது, அங்கு பயங்கரமான கூட்டம்; அப்போது  ‘லவ் டுடே’ படம் ஹிட்டாகி இருந்தது. 

காரின் உள்ளே இருந்து வெளியே பார்த்த போது, விஜய்யின் படம் பொறித்த பேனர் இருந்தது. உடனே அவர், என்னிடம் இந்தப்பையனுக்கு ஏன் இவ்வளவு கிரேஸ் தெரியுமா? என்று கேட்டார். உடனே நான் இப்போதுதான் இரண்டு மூன்று படங்கள் ஹிட்டாகி இருக்கிறதல்லாவா சார் என்றேன். 

அவர் உடனே இல்லை என்றார். அரைமணிநேரமாக எதுவும் சொல்லாத அவர், அதற்கு காரணம் விஜய்யின் முகம் பூனை குடும்பத்தின் முகம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் அந்த முகம் பூனை, புலி, சிங்கம் ஆகிய முகங்களின் முகத்தை ஒத்தது. அதே போல குதிரை குடும்பத்தின் முகமும் இருக்கிறது. இந்த முகத்தோற்றங்களை கொண்டவர்கள் உலகளவில் நட்சத்திரங்களாக ஜொலித்திருக்கிறார்கள். காரணம் இவை இரண்டுமே குழந்தைகளுக்கு பிடிக்கும்; அதே போல இரண்டும் திறன் வாய்ந்தது. ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி என்று சொன்னார். ரஜினி சாருக்கு பார்த்தீர்கள் என்றால் அது புலி முகம். சிவாஜி சாருக்கு குதிரை முகம். இந்த விதியை அவர் முதன்முறையாக அவர் என்னிடம் சொன்னார்.” என்று அவர் பேசினார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி