தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manobala: ‘ரஜினியின் ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் மனோபாலா’ தெரியுமா இந்த ரகசியம்?

Manobala: ‘ரஜினியின் ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் மனோபாலா’ தெரியுமா இந்த ரகசியம்?

May 04, 2023, 08:02 AM IST

google News
‘இது ரஜினி படம், உங்க படம் மாதிரி நினைச்சு இருக்காதீங்க…’ என ராதிகா என்னை அப்பப்போ அலர்ட் பண்ணுது!
‘இது ரஜினி படம், உங்க படம் மாதிரி நினைச்சு இருக்காதீங்க…’ என ராதிகா என்னை அப்பப்போ அலர்ட் பண்ணுது!

‘இது ரஜினி படம், உங்க படம் மாதிரி நினைச்சு இருக்காதீங்க…’ என ராதிகா என்னை அப்பப்போ அலர்ட் பண்ணுது!

மறைந்த மனோபாலா, இயக்குனராக ஒரு காலத்தில் ஜொலித்தவர். ரஜினியை வைத்து அவர் இயக்கிய ஊர்காவலன் படம், ரஜினிக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படி என்ன திருப்புமுனை? மனோபாலா தன்னுடைய யூடியூப் சேனலில் முன்பு தெரிவித்திருந்த சுவாரஸ்யமான தகவல் இதோ:

‘‘சிறைப்பறைவை படம் முடித்துவிட்டு, படம் பெரிய ஹிட் அடித்து விட்டு, நான் கலைமணி சார் எல்லாரும் குற்றாலத்தில் அடுத்த படத்தின் கதைக்காக  முகாமிட்டிருந்தோம். அப்போ செல்போன் கிடையாது. காட்டேஜ் தொலைபேசி எண்ணுக்கு சத்யா மூவிஸில் இருந்து போன் வருகிறது. எப்படி நம்பர் வாங்கினார்கள் என்று தெரியவில்லை. ‘நாளை காலை 10:30 மணிக்கு ஆர்.எம்.வீரப்பன் சாரை பார்க்க வேண்டும், இரவே ரயில் ஏறியோ, பஸ் ஏறியோ வந்திடுங்க’ என்று அழைத்தார்கள். 

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, கலைமணியிடம் போய் விசயத்தை சொன்னேன், ‘உடனே போங்க, பெரிய வாய்ப்பு போயிடுங்க’ என்று கூறினார். சரினு டீ குடிச்சிட்டு உட்கார்ந்திட்டு இருக்கும் போது, அதே நம்பருக்கு இன்னொரு போன் வருது. யார்னு போய் பார்த்தா, கலைஞரோட பூம்புகார் புரொடக்‌ஷன்ல இருந்து அழைப்பு வருது. முரசொலி செல்வம் பேசினார். ‘காலை 10:30 மணிக்கு கலைஞரை பார்க்கணும், வந்திடுங்க’ என்று போனை வைத்து விட்டார். 

மறுபடி கலைமணி சாரிடம் போய் விசயத்தை சொன்னால், ‘அதிர்ஷ்டம் உங்களுக்கு கூரையை தாண்டி கொட்டுது, ஒரு பக்கம் எம்.ஜி.ஆர்., கம்பெனி, இன்னொரு பக்கம் கலைஞர் கம்பெனி’ என்று கூறுகிறார் அவா். அவரே என்னை அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் ஏற்றிவிட்டார். 

சென்னை வந்ததும் எனக்கு ஒரே குழப்பம். கலைஞரை பார்க்கும் முன், முரசொலி செல்வம் அண்ணனிடம் விசயத்தை சொன்னேன். ‘உங்க சிரமம் புரியுது, வாங்க பேசிக்கலாம்’ என்றார். கோபாலபுரம் வீட்டில் கலைஞரை சந்தித்தோம். ‘எப்போ ஸ்டார்ட் பண்ணலாம், அடுத்த மாதம் போயிடலாமா?’ என்று கலைஞர் கேட்டார். ‘அப்பா… அதில் ஒரு சின்ன தயக்கம்’ என்று நான் சொன்னேன். முரசொலி செல்வம் விசயத்தை சொல்ல, ‘ரஜினிகாந்த் நடிக்கிறதா சொல்றீங்க, அந்த படத்தை பண்ணுய்யா.. நீ போய் அதை பண்ணு’ என, வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தார் கலைஞர்.

அங்கே முடிச்சிட்டு நேரா ஆர்.எம்.வீரப்பன் சாரை சந்தித்தேன். அவரிடம் கலைஞரை சந்தித்ததை நான் சொல்லவில்லை. 1960களில் வந்த ஒரு சிறுகதையை கதையாக சொன்னார்கள். சின்ன சின்ன குறைகள் இருந்தது. அதை சரி செய்து விடலாம் என கூறி, திரைக்கதையில் இறங்கினோம்.

முதலில் சிற்பியை தான் அந்த படத்திற்கு தேர்வு செய்தோம். திடீரென சங்கர் கணேஷை போட்டார்கள். அதனால் எனக்கு சின்ன வருத்தம். பின்னர் அது ஏன் என புரியவைத்தார்கள். அதன் பின் கதை தயார் செய்து, சென்னை 5 ஸ்டார் ஓட்டலில் ரஜினியை சந்தித்து கதையை சொன்னேன். முதல் பாதியை மட்டும் கேட்ட ரஜினி, இரண்டாம் பாதியை கேட்காமலேயே ஓகே பண்ணிட்டார். ‘இந்த கதை என்னோட நிறத்தை மாற்றும் என தோன்றுகிறது, நான் என்ன பண்ணனும்’ என்று ரஜினி கேட்டார். 

‘சார்… ஒரே ஹேர் ஸ்டைலில் பல வருசமா வெச்சிருக்கீங்க… கொஞ்சம் வேற மாதிரி பண்ணா நல்லா இருக்கும்’ என்று நான் கூறினேன். ‘என்ன பண்ணனும் சொல்லுங்க?’ என்றார் ரஜினி. மும்பையிலிருந்து ஆட்களை வர வைத்து ரஜினி ஹேர் ஸ்டைலை மாற்றினேன். 6 சட்டை, 6 பேண்ட் தான் அந்த படத்தில் ரஜினியின் காஸ்ட்யூம். 

எல்லா ஆர்டிஸ்டோட மைசூரூ போய் இறங்கிட்டோம். இறங்கி முதல் 2 நாள் பாடல்கள் எடுத்தோம். மாசி மாசம் தான் சொல்லு சொல்லு பாடல், ரஜினியை பார்த்து ராதிகா மிரண்டு போச்சு. ‘சார்… 10 வயசு உங்களுக்கு குறைந்து போச்சு’ என்று பிரமிப்பா ரஜினியிடம் ராதிகா சொன்னாங்க. 

ஷூட்டிங் காலை 7 மணி என்றால், ரஜினியும் கரெக்ட்டா 7 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார். ‘இது ரஜினி படம், உங்க படம் மாதிரி நினைச்சு இருக்காதீங்க…’ என ராதிகா என்னை அப்பப்போ அலர்ட் பண்ணுது. ரஜினி 50 நாள் டேட் கொடுத்தார், 46 நாளில் படப்பிடிப்பு முடித்து, 2 நாளில் டப்பிங் முடித்து, 48 நாளில் படத்தை முடித்தேன்,’’
என்று அந்த படம் உருவானவிதம் குறித்து மனோபாலா தன்னுடைய யூடியூப் சேனலில் மனோபாலா கூறியுள்ளார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி