‘பில்டப்களை ரசித்தேன்’ லப்பர் பந்து திரைப்படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
Nov 06, 2024, 08:49 PM IST
தமிழசரன் பச்சை முத்துவுக்கு வாழ்த்துகள். தினேஷ் ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் தினேஷ் குமார், புருஷோத்தமன் பிரின்ஸ் பிக்சர்ஸ் உட்பட ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என்று கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான இப்படத்தை கனா, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவருமான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். இந்த படம் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இப்படத்தை மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு அர்ப்பணித்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இந்த படம் சிறப்பாக உள்ளது. கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டப்களை ரசித்தேன் என இயக்குநர் காத்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. "லப்பர் பந்து திரைப்படம் அழகான நடிப்பு திறனால் உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சி அடைய செய்த சிறப்பான திரைப்படம். இதில் கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டப்களை ரசித்தேன். அறிமுக படத்தை சிறப்பாக வழங்கி உள்ள தமிழசரன் பச்சை முத்துவுக்கு வாழ்த்துகள். படத்தில் நடித்த தினேஷ் ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் தினேஷ் குமார், புருஷோத்தமன் பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓடிடியில் லப்பர் பந்து எப்போது தெரியுமா
லப்பர் பந்து திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது.
கதை இது தான்
கிரிக்கெட்டை விரும்பும் இரு ஆண்களுக்கு இடையே நடக்கும் மோதலை உள்ளடக்கிய வழக்கமான விளையாட்டு நாடகமாக இப்படம் தொடங்குகிறது. பூமாலை அக்கா கெத்து (அட்டகத்தி தினேஷ்) ஒரு கடினமான பேட்ஸ்மேன் மற்றும் உள்ளூர் ஜாம்பவான் என்றாலும், அன்பு (ஹரிஷ் கல்யாண்) ஒரு வல்லமைமிக்க பந்துவீச்சாளர், அவர் தனது பெயரை உருவாக்கத் தொடங்குகிறார்.
சாதிகளை கடந்து வெற்றி
இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் நாம் முதலில் சந்திக்கும் போது, கெத்து ஒரு திருமணமான இளைஞன், அவர் தனது மனைவி அசோதாயின் (ஸ்வாசிகா) கோபத்தை சம்பாதிப்பதில்லை. ஆனால் அவரது பொறுப்பற்ற தன்மையால் விரக்தியடைகிறார். அன்பு ஒரு பள்ளி மாணவன், உள்ளூர் கிரிக்கெட் அணியான ஜாலி பிரண்ட்ஸ் அணிக்காக விளையாடப் போகிறான், ஆனால் அந்த அணியின் ஆதிக்க சாதி வீரர்களால் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் எப்படி சாதிகளை கடந்து வெற்றி அடைவார் என்பதே கதையாகும்.
படத்தை கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டி உள்ளார். “ திரைப்படம் தயாரிப்பது ஒரு தீவிரமான வணிகமாகும், அது மிகவும் கடின உழைப்பையும் படைப்பாற்றலையும் உள்ளடக்கியது, எனவே நான் எந்தத் திரைப்படத்திலும் உள்ள நேர்மறையானவற்றைப் பார்க்கிறேன் மற்றும் எதிர்மறைகளைப் பற்றி மிகக் குறைவாகவே பேசுகிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதை இன்று என்னால் பார்க்க முடிந்தது. ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடமாகும் “ என்றார்.
டாபிக்ஸ்