’லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு.. போட்டோஸ் இணையத்தில் வைரல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ’லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு.. போட்டோஸ் இணையத்தில் வைரல்!

’லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு.. போட்டோஸ் இணையத்தில் வைரல்!

Divya Sekar HT Tamil
Oct 26, 2024 08:49 AM IST

Lubber Pandhu : லப்பர் பந்து படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழரசன் இயக்குனர், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளன.

’லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு.. போட்டோஸ் இணையத்தில் வைரல்!
’லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு.. போட்டோஸ் இணையத்தில் வைரல்!

விஜயகாந்துக்கு அர்ப்பணித்திருக்கிறார்

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அவை அனைத்தும் வெற்றி வாகை சூடியதா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் லப்பர் பந்து.

முதலில் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பால் படிபடியாக உயர்ந்து 300 திரையரங்குகளில் ஓடியது. இந்நிலையில் லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இப்படத்தை மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு அர்ப்பணித்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

நடிகர் சிம்பு வாழ்த்து

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழரசன் இயக்குனர், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளன. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்க சங்கிலி கொடுத்த ஹரிஷ் கல்யாண்

முன்னதாக ஹரிஷ் கல்யாணுக்கு இந்த படம் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், தனக்கு வெற்றியை கொடுத்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு, நடிகர் ஹரிஷ் கல்யாண் மூன்று பவுன் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.