தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இன்னும் கிட்ட..கிட்ட.. உதடுகள் நெருக்கமாகல… சைக்கோ என்ற திட்டிய நயன்.. விக்கி அடித்த லூட்டி! -விக்னேஷ் சிவன்!

‘இன்னும் கிட்ட..கிட்ட.. உதடுகள் நெருக்கமாகல… சைக்கோ என்ற திட்டிய நயன்.. விக்கி அடித்த லூட்டி! -விக்னேஷ் சிவன்!

Nov 17, 2024, 07:58 AM IST

google News
நானும் ரெளடிதான் படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிங் சீனைஎடுத்த விதம் பற்றியும், அதற்கு பின்னால் நயன் கடிந்து கொண்டதையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருக்கிறார்.
நானும் ரெளடிதான் படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிங் சீனைஎடுத்த விதம் பற்றியும், அதற்கு பின்னால் நயன் கடிந்து கொண்டதையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருக்கிறார்.

நானும் ரெளடிதான் படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிங் சீனைஎடுத்த விதம் பற்றியும், அதற்கு பின்னால் நயன் கடிந்து கொண்டதையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருக்கிறார்.

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரெளடிதான். 2015-ல் வெளியான இந்தத்திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்த நிலையில், இந்தத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை, நயனின் ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என்று வழக்கு தனுஷ் தொடர்ந்தார்.

குறுக்கே வந்த தனுஷ்

இதனால் நயனின் ஆவணப்படம் வெளியாகமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்தப்படம் தொடர்பான காட்சிகள் இல்லாமல், ஆவணப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நானும் ரெளடிதான் திரைப்படத்தில் நயனுடன் காதல் மலந்த பிறகு, விஜய் சேதுபதிக்கும் நயனுக்கும் இடையேயான நெருக்கமான முத்தக்காட்சியை எடுக்கும் போது நடந்த சுவாரசியமான அனுபவம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2 வருடங்களுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.

 

நயன் - விக்னேஷ்

இது குறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “ தொழில் என்று வந்து விட்டால், அங்கு காதலுக்கு இடமில்லை. நானும் ரெளடிதான் ஷூட்டிங் பாதியின் போதே, எங்களுக்குள் காதல் மலர்ந்து விட்டது. இந்த நிலையில் ஒரு நாள் படத்தில் இடம் பெற்ற முத்தக்காட்சியை எடுத்தோம். அது மிகவும் நெருக்கமான காட்சி என்பதால், நயன்தாரா என்னிடம் இந்த சீனை இவ்வளவு நெருக்கமாக எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இந்தக்காட்சியை வேறு மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும் தோன்றினால் கூட, அப்படி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அதற்கு நான் இது தொழில்தானே.. அப்புறம் என்ன? என்று சொல்லி, அந்த சீனை எடுத்தேன். அந்த சீனை எடுக்கும் போது, முதலில் விஜய்சேதுபதி நயன் நான் நினைத்த அளவு நெருக்கமாக இல்லை. இதனையடுத்து நான் இன்னும் நெருக்கம்... ம்ம்ம்.. நெருக்கம்... என்றேன். அப்படித்தான் அந்தக்காட்சியை எடுத்தோம். சீனில் நடித்து முடித்து விட்டு வந்த நயன்... என்னை சைக்கோ... என்று திட்டினார்.” என்று பேசினார்.

 

தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை வைத்து நயன் வெளியிட்ட அறிக்கையும் பின்னணியும்..

 

இந்த நிலையில் இது குறித்து பிரபல வலைத்தளமான வலைப்பேச்சு தளத்தில், தனுஷ் தரப்பில் ஏன் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி விரிவாக பேசியிருக்கிறார் அந்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.

இது குறித்து அவர் பேசும் பொழுது," நானும் ரவுடிதான் திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க,.விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படப்பிடிப்பின் பொழுது நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஒரு கட்டத்தில் அந்த காதல் பற்றி கொண்டு எறிய,.விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தினார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது..இதில் கடுப்பான தனுஷ் இனி நான் படத்திற்கு ஒரு பைசா கூட தர மாட்டேன்; படத்தை முடிந்தால் முடியுங்கள்; இல்லை என்றால், படத்தை நான் நிறுத்தி விடுகிறேன் என்று கறாராக கூறிவிட்டார்.

இந்த பிரச்சினையின் வழியாக, நயன்தாராவிற்கும், தனுஷிற்கும் இடையே மிகப்பெரிய விரோதம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் இரு தரப்புமே அதை வெளியே அப்பட்டமாக காண்பிக்காமல், சுமூகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பு, netflix நிறுவனத்துடன் தன்னுடைய ஆவணப்படத்தை எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், அந்த ஆவணப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியே வராமலேயே இருந்தது அதற்கு காரணம் தனுஷ்தான். அந்த ஆவணப் படத்தில் தனுஷின் நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் அது கிடப்பிலேயே போடப்பட்டது இப்போது நயன்தாரா தரப்பு, சட்டவிரோதமாக நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறது.

பிரச்சினையில் தலையிட்ட நயன்!

இந்த நிலையில் நயன்தாரா பிரச்சினையில் தலையிட்டு, அவர் தன்னுடைய பணத்தை போட்டு அந்த படத்தைப் போட்டு முடிக்க உதவி செய்தார். மேலும் இது தொடர்பான எந்த விவாதமாக இருந்தாலும், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டும் சவாலும் விட்டு இருக்கிறது.

யார் குற்றவாளி?

இன்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை பார்க்கும் பொழுது நயன்தாரா என்னவோ அப்பாவி போலவும், தனுஷ் மிகப்பெரிய குற்றவாளி போலவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்தது வேறு; ஆம், திரை மறைவில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன.

நயன்தாரா தரப்பு, நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து பாடல்களையோ காட்சிகளையோ பயன்படுத்த வேண்டுமென்றால் நேரடியாக தனுஷை தொடர்பு கொண்டு, முறையாக அனுமதி கேட்டு இருக்கலாம். ஆனால்,அது நடக்கவில்லை;

இதில், விக்னேஷ் சிவன் ஒரு பயங்கரமான வேலை பார்த்து இருக்கிறார்; தனுஷின் மேனேஜரான ஸ்ரேயாஸ் விக்னேஷ் சிவனுக்கும் நண்பர். அவர் ஒருநாள் அவருக்கு போன் செய்து மிகவும் சகஜமாக பேசுவது போல, நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகளை நான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு மெயில் போடு என்று சொல்லிவிட்டு சாப்பிட்டியா... நன்றாக இருக்கிறாயா..? என்று கேட்டு உடனடியாக போனை கட் செய்துவிட்டாராம்;

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை