Vemal: நானும் விஜய்சேதுபதி,வெற்றி அண்ணன் மாதிரி சிலரை தூக்கிவிட்டேன்.. என் காலைப் பிடிச்சி வாரிவிட்டாங்கே - நடிகர் விமல்
Vemal: நானும் விஜய்சேதுபதி,வெற்றி அண்ணன் மாதிரி சிலரை தூக்கிவிட்டேன் என்றும், என் காலைப் பிடிச்சி வாரிவிட்டாங்கே எனவும் நடிகர் விமல் பேசியுள்ளார்.

Vemal: வெற்றிமாறன், விஜய்சேதுபதி மாதிரி தானும் சிலருக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்டேன் எனவும், அவர்கள் தன் காலைப் பிடிச்சு வாரிவிட்டாய்ங்க எனவும் ‘சார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விமல் பேசியுள்ளது வைரல் ஆகியுள்ளது.
சார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விமல் பேசியதாவது, ‘’வெற்றிமாறன் சார். அவர் தான் ‘சார்’ படத்துக்கு சார். வெற்றிமாறன்னு போட்டதால் தான் அது சார்ன்னே வெளியில் தெரியுது. இல்லைன்னா சார் என்ன சார், (மெதுவான குரலில் மிமிக் செய்கிறார்), சார் அப்படிங்கிற உரத்த குரல் நம்ம அண்ணே வெற்றிமாறன் மூலமாகத்தான் வந்திருக்கு. அதனால், அவருக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிறேன்.
அதேமாதிரி இப்படி வந்து உரக்கப்பேசுடா. உற்சாகமாகப் பேசுடா அப்படி தூண்டிவிட்டுட்டு இருக்கிற நண்பர் விஜய்சேதுபதி அவர்கள். கூத்துப்பட்டறையில் இருக்கும்போது என் நாடகத்தை இப்படியே உட்கார்ந்துட்டு பார்ப்பார். டேய் மினி சூப்பரா பண்ணுனடா, நல்லாப் பண்ணியிருக்கடா என்று அன்னைக்கு உற்சாகப்படுத்தினார். இன்னவரைக்கும் உற்சாகப்படுத்திட்டு இருக்கார்.