தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal Film: மீண்டும் இணையும் அதகள கூட்டணி.. பரபர ஷுட்டிங் ஆரம்பம்.. ஹீரோயின் யாரு தெரியுமா?

Vishal film: மீண்டும் இணையும் அதகள கூட்டணி.. பரபர ஷுட்டிங் ஆரம்பம்.. ஹீரோயின் யாரு தெரியுமா?

Jul 15, 2023, 11:55 AM IST

google News
விஷாலும் இயக்குநர் ஹரியும் மீண்டும் இணைய இருக்கின்றனர்.
விஷாலும் இயக்குநர் ஹரியும் மீண்டும் இணைய இருக்கின்றனர்.

விஷாலும் இயக்குநர் ஹரியும் மீண்டும் இணைய இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் குடும்ப செண்டிமெண்டையும் ஆக்‌ஷனையும் இணைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹரி. இவர் இயக்கிய சாமி, ஐயா, தாமிரபரணி, சிங்கம், பூஜை உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான யானை திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 

முன்னதாக இவரும் விஷாலும் ‘தாமிரபரணி’ திரைப்படத்தில் இணைந்தனர். இந்தத்திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இருவரும் பூஜை திரைப்படத்தில் மீண்டும் இணைந்தனர். இந்தத்திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர்.

விஷாலின் 34 வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்தத்திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

முன்னதாக இயக்குநர் ஹரி இயக்கிய ஆறு, சிங்கம், சிங்கம் , வேங்கை, சாமி 2 உள்ளிட்டத்திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தத்திரைப்படத்தை பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க இருக்கிறார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி