Jani Master: 6 மாதம் டார்சர் செய்யப்பட்ட மைனர் பெண் - பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை பிளான் போட்டு தூக்கிய காவல்துறை
Sep 19, 2024, 01:13 PM IST
Jani Master: தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை, இன்று ( செப் 19 ) ஹைதராபாத் காவல் துறையினர் பெங்களூரில் வைத்து கைது செய்து உள்ளனர்.
Jani Master: நடிகர் விஜய்யின் பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர் பிரபல ஜானி மாஸ்டர். இவர் மீது அவரது நடனக் குழுவில் பணியாற்றும் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, அண்மையில் புகார் ஒன்றை கொடுத்து இருந்தார்.
அதில், கடந்த 6 மாதங்களாக அவரது குழுவில் பணியாற்றிய வந்த தன்னை ஜானி மாஸ்டர், வெளிப்புற படப்பிடிப்பில் இருக்கும் போது நார்சிங்கில் இருக்கும் அவரது வீடு உட்பட பல இடங்களில் என்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப்பெண், மேலும் இந்த சந்தர்ப்பங்களில் அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமல்லாமல், தன்னை அடித்தும் காயப்படுத்தி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
வழக்குப்பதிவு
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ராய்துர்கம் காவல்துறையினர் ஜானி மாஸ்டர் மீது சட்டப்பிரிவு 376. 506, 323 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வழக்கை நாரங்கி காவல்நிலையத்திற்கு மாற்றி விசாரணையை முடுக்கி விட்டு இருக்கின்றனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்த ஜானி மாஸ்டரை, கட்சி தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து ஜானி மாஸ்டரை கைது செய்ய முயன்ற போது அவர் வீடு, அலுவலகத்தில் இல்லாமல் தலைமறைவாக இருந்தார்.
கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர்
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை, இன்று ( செப் 19 ) ஹைதராபாத் காவல் துறையினர் பெங்களூரில் வைத்து கைது செய்து உள்ளனர். இவரை போன்றவர்களை யாரும் சும்மா விட கூடாது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல், ‘பட்டாஸ்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜில் ப்ரோ’பாடல், விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ‘ஹலமிதி ஹபி போ’ பாடல், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடல், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம் பெற்ற ‘காவாலா’ உள்ளிட்ட பல ப்ளாக்பஸ்டர் ஹிட் பாடல்களுக்கு ஜானி மாஸ்டர் நடன வடிவமைப்பு செய்திருக்கிறார். ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு அண்மையில் இவருக்கு சிறந்த நடன வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்