தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cool Suresh: நான் போறேன்.. பெட்டியோடு கிளம்பிய கூல் சுரேஷ்.. காரணம் என்ன?

Cool Suresh: நான் போறேன்.. பெட்டியோடு கிளம்பிய கூல் சுரேஷ்.. காரணம் என்ன?

Aarthi V HT Tamil

Oct 31, 2023, 11:10 AM IST

google News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று 30 ஆவது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று 30 ஆவது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று 30 ஆவது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்தனர். விஜே அர்ச்சனா, கானா பாலா, பிரவோ, தினேஷ், பாரதி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர்.

ஒரே நேரத்தில் ஐந்து பேர் பிக் பாஸ் வைல்டு கார்டாக உள்ளே வந்தனர். இதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

போதும் இனிமே யாரும் வேண்டாம் என கை எடுத்து வணக்கம் வைத்துவிட்டார்கள். அதனால் எப்படியாவது டார்கெட் செய்து இவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என திட்டத்துடன் இருக்கிறார்கள்.

இந்த வார கேப்டனான பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விஜே அர்ச்சனா, கானா பாலா, பிரவோ, தினேஷ், பாரதி ஆகிய ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களையும் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று 30 ஆவது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது.

அதில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அசஞ்சா போச்சு என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அந்த டாஸ்கில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது பிரதீப், கூல் சுரேஷை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான கூல் சுரேஷ் நான் இந்த வீட்டை போறேன் என சொல்லி என்று பெட்டியை எடுத்து கொண்டு கிளம்பி வெளியே வருவது போல் வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி