தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Venkatesh Bhat: களத்துல சந்திப்போம் தாமு.. விஜய் டிவிக்கு போட்டியாக இறங்கிய வெங்கடேஷ் பட்! வளைத்துப்போட்ட சன் டிவி!

Venkatesh Bhat: களத்துல சந்திப்போம் தாமு.. விஜய் டிவிக்கு போட்டியாக இறங்கிய வெங்கடேஷ் பட்! வளைத்துப்போட்ட சன் டிவி!

Apr 29, 2024, 10:39 AM IST

அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் கமிட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக, சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது
அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் கமிட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக, சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது

அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் கமிட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக, சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. அதில் நடுவர்களாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சமையல் கலைஞர்களான தாமுவும், வெங்கடேஷ்பட்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Movies In Tv: சூப்பர் ஹிட் மூவிஸ்.. தொலைக்காட்சியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?

32 Years Of Nadodi Pattukkaran: கொள்ளையர்களை பிடித்து கொடுக்கும் இசைக்குழு நாயகனே ‘நாடோடி பாட்டுக்காரன்’

HBD T. K. Ramamoorthy: இசைக் கலைஞர் டி.கே. ராமமூர்த்தி பிறந்த நாள் இன்று.. எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்றியது எப்படி?

Savukku shankar: ஒன்றாக மீடியா தொடங்க போடப்பட்ட திட்டம்..சவுக்கு சங்கருக்கு அமீர் மீது என்ன வன்மம்? - ஆதம் பவா!

கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி, 5 ஆவது சீசனை நோக்கி நகர்ந்தது.

 

சமையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள், போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி, 5 ஆவது சீசனை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில்தான் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும், புது நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி, வெங்கடேஷ் பட் அறிக்கை வெளியிட்டார். கூடவே அந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் வெளியேறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் கமிட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் கமிட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக, சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

குக் வித் கோமாளி டெம்ப்ளேட்டையே, அப்படி திருப்பிப்போட்டு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெங்கடேஷ் பட் நடுவராக வந்திருக்கும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த மோனிஷா, ஜிபி முத்து, தீபா, பரத் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கமிட் செய்யப்பட்டு இருக்கின்றனர். அது தொடர்பான புரோமோ வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து வெங்கசேஷ் பட் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன் 5 -ல் நான் நடுவராக தொடர்கிறேன் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பின் வழியாக அதனை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது.

நான் அந்த நிகழ்ச்சியில் நடுவராக தொடரவில்லை. லட்சக்கணக்கான மக்களையும், என்னையும் மகிழ்ச்சிபடுத்திய அந்த அழகான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுக்க இருக்கிறேன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது. அது எனக்கு செளகரியமாகவும், நான் நானாக இருப்பதற்கும் வழிவகுத்தது.

கடந்த 24 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சேனலுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் என்னுடைய பிற வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறு கிறேன். இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றுதான். 

ஆனால் நான் இன்னொரு வித்தியாசமான கான்செப்ட்டில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு மேடையில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.” என்று குறிப்பிட்டு இருந்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி