தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  32 Years Of Putham Pudhu Payanam: பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெற்றி பெற்ற படம்

32 Years of Putham Pudhu Payanam: பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெற்றி பெற்ற படம்

Manigandan K T HT Tamil

Nov 22, 2023, 05:15 AM IST

google News
புரியாத புதிர், சேரன் பாண்டியன் ஆகிய படங்களைத் தொடர்ந்து புத்தம் புது பயணம் படத்தை இயக்கியிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.
புரியாத புதிர், சேரன் பாண்டியன் ஆகிய படங்களைத் தொடர்ந்து புத்தம் புது பயணம் படத்தை இயக்கியிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

புரியாத புதிர், சேரன் பாண்டியன் ஆகிய படங்களைத் தொடர்ந்து புத்தம் புது பயணம் படத்தை இயக்கியிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

புத்தம் புது பயணம் என்பது 1991 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும், இது கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய படம். ஆர். பி. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்தில் ஆனந்த் பாபு, விவேக், சின்னி ஜெயந்த், சூப்பர்குட் கண்ணன், ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இது 22 நவம்பர் 1991 அன்று வெளியிடப்பட்டது.

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

விவேக்(விவேக்), நாராயணன் (சின்னி ஜெயந்த்), கண்ணன் (கண்ணன்) மூவரும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஊரின் பெரிய தொழிலதிபரின் மகனான பாபுவும் (ஆனந்த் பாபு) இவர்கள் தங்கியிருக்கும் மருத்துவமனைக்கு வந்து இவர்களது அறையிலேயே தங்குகிறார். இவர்கள் நால்வருக்கும் ரத்தப் புற்றுநோய் இருப்பதால் இவர்கள் இன்னும் சில மாதங்களே உயிரோடு இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்கின்றனர்.

அவர்கள் நான்கு பேரும் நல்ல நண்பர்களாக ஆகிறார்கள். அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறி, சிவலிங்கத்தின் (கே. எஸ். ரவிக்குமார்) பிடியில் இருக்கும் ஒரு கிராமத்தை அடைகிறார்கள். சிவலிங்கத்தின் பிடியில் இருந்து அந்த கிராமத்து மக்களை காப்பாற்றினார்களா அவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினார்களா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

புரியாத புதிர், சேரன் பாண்டியன் ஆகிய படங்களைத் தொடர்ந்து புத்தம் புது பயணம் படத்தை இயக்கியிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படம் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வளரும் நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றி பெற்றார். ஈரோடு செளந்தர் கதை, வசனம் எழுதினார்.

செளந்தர்யன் பாடல்களை எழுதி இசையமைத்தார். ஊடகங்கள் இந்தப் படத்தை பாராட்டி எழுதின.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி