தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Omakuchi Narasimhan:ட்ராமா..கலை.. காமெடி..நரசிம்மன் ஓமக்குச்சி நரசிம்மனான கதை !

Omakuchi Narasimhan:ட்ராமா..கலை.. காமெடி..நரசிம்மன் ஓமக்குச்சி நரசிம்மனான கதை !

Mar 12, 2023, 06:15 AM IST

google News
நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனின் நினைவுதினம் இன்று
நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனின் நினைவுதினம் இன்று

நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனின் நினைவுதினம் இன்று

நாம் ஒரு விஷயத்தை உண்மையாக நேசிப்பதோடு அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில், அந்த விஷயத்தில் நம்முடைய இருப்பு என்பது நீண்ட தூர பயணமாக மாறும்; அப்படி சினிமாவை நேசித்து அதில் நீண்ட தூர பயணத்தை அடைந்தவர்தான் ஓமக்குச்சி நரசிம்மன். அவரின் நினைவுதினம் இன்று. 

சினிமாவில் நடிப்பதற்கு தேவைப்படுவதாக சொல்லப்படும் உடலோ, முகபாவனையோ துளியும் கூட நரசிம்மனிடம் கிடையாது.. ஆனால் அவர், தன்னிடம் இருந்தவற்றை பயன்படுத்தி தமிழ் சினிமாவின் தேவைப்படும் காமெடி நடிகராக தன்னை தகவமைத்து கொண்டார்.

தமிழில் 1953 ஆம் ஆண்டு கே.பி. சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான ஒளவையார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக  திரைத்துறைக்கு அறிமுகமானார் நரசிம்மன். அவருக்கு நாடகங்கள்தான் நடிப்பின் அடித்தளம். 

அங்கு பல்வேறு நாடகங்களில் நடித்தவருக்கு அவரின் ஒல்லியான உடல்தோற்றம் ‘ஓமக்குச்சி’ என்ற அடைமொழியை சொந்தமாக்கியது. அங்கிருந்தே அவர் ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைக்கப்பட ஆரம்பித்தார். சென்னையில் எல்.ஐ.சியில் பணியாற்றி கொண்டிருந்தவர் 1969 ஆம் ஆண்டு வெளியான ‘திருக்கல்யாணம்’ படத்தில் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் காமெடி ஜாம்பாவன்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றினார். 

குறிப்பாக சூரியன், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை. 14 மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்த ஓமக்குச்சி நரசிம்மன் கமல்ஹாசன், அர்ஜூன், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் ஒரு ஹாலிவுட் படமும் அடக்கம். 

கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் நடித்த அவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி தன்னுடைய 73 ஆவது வயதில் இயற்கை எய்தினார். சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் பிறந்தனர். இவரது மகன் காமேஷ்வரா சாமியாராக மாறியது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி