தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bonda Mani: ‘என் வீட்ல தங்கி சாப்பிட்ட நன்றி இருக்கா சூரிக்கு?’ -போண்டா மணி!

Bonda Mani: ‘என் வீட்ல தங்கி சாப்பிட்ட நன்றி இருக்கா சூரிக்கு?’ -போண்டா மணி!

HT Tamil Desk HT Tamil

Apr 03, 2023, 06:00 AM IST

google News
கடிதம் எழுதி என் மனைவி மூலமா ஐசரி கணேஷ் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பார்த்திபன் சார், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் சார் எல்லாரிடமும் அனுப்பினேன்.
கடிதம் எழுதி என் மனைவி மூலமா ஐசரி கணேஷ் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பார்த்திபன் சார், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் சார் எல்லாரிடமும் அனுப்பினேன்.

கடிதம் எழுதி என் மனைவி மூலமா ஐசரி கணேஷ் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பார்த்திபன் சார், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் சார் எல்லாரிடமும் அனுப்பினேன்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சிறுநீரக செயலிழப்பால் அவதி அடைவது அனைவருக்கும் தெரியும். விரைவில் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கும் நிலையில், பிரபல இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி இதோ:

‘‘உடம்பு இப்போ கொஞ்சம் பரவாயில்லை, டயாலீசிஸ் போயிட்டு இருக்கு. 2 மாதத்தில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியிருக்கிறார்கள். போன வாரம் கூட ஒரு கிட்னி கிடைத்தது, 70 வயது என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். 40-50 வயதிற்குள் இருக்கக் கூடிய கிட்னியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எனக்கு கிட்னி கொடுத்து உதவ, சொந்த பந்தம் யாரும் இங்கு இல்லை. நான் இலங்கைக்காரன். ஒன்னு அங்கே போய் பண்ணனும், இங்கே வந்து கொடுக்க முடியாது. அரசு விதிகள் நிறைய இருக்கு. இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியே போய் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ண முடியும். அரசிடம் பதிந்திருப்பதால், கிடைக்க 5 வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள். 

எஸ்.ஆர்.எம்.,யில் மறைந்த நடிகர் மயில்சாமி ஏற்பாடு செய்து, டாக்டர் சக்தி என்பவர் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். மூளைக்காய்ச்சல், விபத்தில் இறப்பவர்கள் வந்தால், அவர்களின் கிட்னியை எனக்கு பயன்படுத்த முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாதத்தில் கிடைத்தாலும் கிடைக்கலாம். 

மயில்சாமி மறைந்துவிட்டார், இவர் இருந்திருந்தால் நான் யாரிடமும் அழைய வேண்டிய அவசியம் இருக்காது. அவரே நடிகர்களிடம் பணம் வசூலித்து அறுவை சிகிச்சைக்கு கொடுத்திருப்பார். அவர் இறக்கும் ஒரு வாரத்திற்கு முன் தான் என்னை சந்தித்து பேசினார்.  ‘என்னை கவனிக்க யாரும் இல்லை’ என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அதை பார்த்து விட்டு, ‘நீ ஒன்னும் கவலைப்படாத, எல்லாம் நல்ல படியா நடக்கும். யாரையும் பத்தி தவறாக பேசிடாத, எல்லாரும் பிஸியா இருப்பாங்க. சரியான நேரத்தில் உதவி பண்ணுவாங்க. நாம என்ன கொடுத்தா வெச்சிருக்கோம்,’ என்று என்னிடம் கூறினார். 

‘இல்லண்ணே, என்ன செய்யுறதுனு தெரியல… அதான் அப்படி பண்ணிட்டேன்’ என்று கூறினேன். ‘அதான் நான் இருக்கேன்ல… நீ ஏன் கஷ்டப்படுற? ஆபரேஷனை ஃபிக்ஸ் பண்ணு, ரெடி பண்ணிடலாம்’ என்று சொன்னார். என் நேரம், அவர் போய் சேர்ந்துட்டார். 

உடல் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதை கவனிக்காமல், வேலையில் மும்முரமாக இருந்து சக்கரை நோய் இருப்பதை கூட அறியாமல் இருந்துவிட்டேன்.  8 மாசமா வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கேன், நண்பர்கள் தான் உதவுறாங்க. இப்போ அறுவை சிகிச்சை செய்ய மொத்தமா 7 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 

கடிதம் எழுதி என் மனைவி மூலமா ஐசரி கணேஷ் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பார்த்திபன் சார், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் சார் எல்லாரிடமும் அனுப்பினேன். மறுநாளே ஐசரி கணேஷ் சார் தொடர்பு கொண்டார். ‘கவலைப்படாதீங்க.. எப்போ ஆபரேஷன்னு சொல்லுங்க, நான் பார்த்துக்கிறேன், கவலைப்படாதீங்கனு’ சொன்னார். அடுத்த நிமிஷம் ரஜினி சார் லைனில் வந்தார். ‘கவலைப்படாதீங்க பார்த்துக்கலாம்’ என கூறி முதலில் ரூ.1 லட்சம் கொடுத்து அனுப்புனார்.  

வடிவேலு கூட நடிச்சு பேர் வந்தது உண்மை, ஆனால் ஊதியம் பெருசா வரல. ஆனால், அவர் கூட நடிச்சதால தான், பெரிய நடிகர்களின் அறிமுகம் கிடச்சது. பணம் கொடுத்து உதவல, போன் பண்ணியாவது விசாரிச்சிருக்கலாம். அவரை விடுங்க, சூரி என் வீட்டுல சாப்பிட்டு, தங்குன ஆளு தான். ஒரு போன் பண்ணி கேட்கல. நான், கூட நடிக்காத விஜய்சேதுபதி சார் உதவி பண்ணி பேசுறாரு, சூரிக்கு பேசுறதுக்கு என்ன? 

வாரம் வாரம் காமெடி தொடர் ஒன்று செய்தோம். காதல் சுகுமாரும் நானும் தான் அதை செய்தோம். 55 வாரம் செய்தோம். இதில் நடிக்க தினமும் சின்ன சின்ன நடிகர்கள் எனக்காக வருவார்கள். காதல் சுகுமார், சூரியை தினமும் அழைத்து வருவார். சுகுமாரை நான் சத்தம் போடுவேன், ‘ஏங்க டெய்லி என்னால 200 ரூபாய் கொடுக்க முடியாது, மாத்தி மாத்தி தான் வாய்ப்பு கொடுப்போம்’ என்று. அப்போ எங்க வீட்ல தான் சூரி இருப்பாரு, சாப்பிடுவார். ஜெயித்ததுக்கு அப்புறும் கண்டுகொள்ளமாட்டேன் என்கிறார்கள்’’
என்று அந்த பேட்டியில் போண்டா மணி கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி