தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chola Chola Song: பொறி பொறி பொறி பறக்க… வெளியானது சோழா சோழா வீடியோ பாடல்

chola chola song: பொறி பொறி பொறி பறக்க… வெளியானது சோழா சோழா வீடியோ பாடல்

Aarthi V HT Tamil

Oct 14, 2022, 12:59 PM IST

google News
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சோழா சோழா பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சோழா சோழா பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சோழா சோழா பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றது.

குறிப்பாக அதில் இடம்பெறும் சோழா சோழா பாடல் ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது. இதில் சியான் விக்ரமின் நடனமும், பாடல் காட்சிப்படுத்திய விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ரசிகர்களின் மனம்கவர்ந்த சோழா சோழா பாடலின் வீடியோவை பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டுள்ளது. யூடியூபில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடலை லட்சக்கணக்கான பார்வைகள் பார்த்து ரசித்துள்ளனர்.

 சத்யபிரகாஷ், மகாலிங்கம் மற்றும் நகுல் அபியன்கர் ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர். இளங்கோ கிருஷ்ணன் பாடலுக்கு வரி எழுதியுள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் உலகலவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் தற்போது வரை 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்து உள்ளது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி