அம்மா இறந்ததுக்குப்பின் குடி, சிகரெட்.. அம்மாவின் பிறந்த நாளில் கிடைத்த மகள்.. கலங்கிய யுவன் சங்கர் ராஜா
அம்மா இறந்ததுக்குப்பின் குடி, சிகரெட் மற்றும் அம்மாவின் பிறந்த நாளில் கிடைத்த மகள் என யுவன் சங்கர் ராஜா பேட்டியளித்துள்ளார்.

அம்மா இறந்ததுக்குப்பின் குடி, சிகரெட் என அலைந்த நாட்கள் குறித்தும் அம்மாவின் பிறந்த நாளில் கிடைத்த மகள் குறித்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருக்கமாகப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அளித்த நேர்காணலில்,
’’ஒரு நான்கு ஆண்டுகளாக எங்கோ போய்ட்டீங்க. என்ன செய்தீங்க?
பதில்: எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கும். என்னுடைய அம்மா இறந்திட்டாங்க. எனக்குத் தெரியும் அவங்க எங்கோயோ இருக்காங்கன்னு. ஆனாலும், அவங்களை மனது எங்கு இருக்காங்கன்னு தேடிட்டே இருக்கு. எனக்கு கனவுகள் மூலமாக அம்மா வந்திட்டே இருக்காங்க. இந்த ஒரு தேடலில் தான் நான் கடவுளை புரிந்து இருக்கேன். முதன்முறையாக கடவுளின் நினைப்பு உங்களுக்கு வருகிறது. அப்போது, நான் யாருடைய மனதை எல்லாம் காயப்படுத்தினேனோ, அதை நினைத்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று மனதார கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இது என்னை அறியாமல் நடந்தது. இந்த தேடலில் எனக்கு கிடைச்சது. ஜென் மனநிலையில் இருக்கிறேன் எனச் சொல்கிறார்கள். இதெல்லாம் தான், அதற்கான காரணம்.
