Parvathy Nair: ரூமுக்குள் வைத்து அடித்து உதைத்த நடிகை! பாய்ந்தது வழக்கு... இந்தப் படத்தின் நடிகையா?
Sep 21, 2024, 01:35 PM IST
Parvathi Nair: அஜித், என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த ஊழியரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் கமல் ஹாசனின் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலினின் நிமிர், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பார்வதி நாயர் மீது வழக்கு
இந்நிலையில் இவர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரை பார்வதி நாயர் வீட்டில் ஊழியராக பணிபுரியும் நபர் அளித்துள்ளார். அதில், பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் தன்னை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக கூறியுள்ளார். இதனடிப்படையில், பார்வதி நாயர், அயலான் படத் தயாரிப்பாளர் கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொருட்கள் திருட்டு
நடிகை பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டில் இவர் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான கடிகாரங்கள், ஐபோன், லேப்டாப் போன்றவை திருடு போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்போது, இந்த திருட்டில் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற நபர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அறைக்குள் பூட்டி வைத்து தாக்குதல்
இதற்கிடையில், நடிகை பார்வதி நாயர் உட்பட 7 பேர், சுபாஷ் சந்திர போஸை வீட்டின் அறைக்குள் பூட்டி வைத்து தாக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்தப் புகாரில் தன் மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், சுபாஷ் அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், சுபாஷ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்தார்.
பின் வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். இருப்பினும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வருகின்றனர் எனக் கூறி, சில நாட்களுக்கு முன் சுபாஷ் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
3 பிரிவுகளில் வழக்கு
இதைத் தொடர்ந்து காவல் ஆணையர், பார்வதி நாயர் உள்பட தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன் பேரில், பார்வதி நாயர், அயலான் பட தயாரிப்பாளர் கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்ட 7 பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின் இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்