தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bommai Nayagi: பாலியல் வன்கொடுமைகள்..நீதி யார் பக்கம்? பொம்மை நாயகி விமர்சனம்!

Bommai Nayagi: பாலியல் வன்கொடுமைகள்..நீதி யார் பக்கம்? பொம்மை நாயகி விமர்சனம்!

HT Tamil Desk HT Tamil

Feb 03, 2023, 10:16 AM IST

google News
வேலுவாக யோகிபாபு நடித்திருக்கிறார். மண்டேலா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முழு நீள கதாநாயகனாக யோகி பாபு நடித்துள்ளார்; தான் எப்போதுமே ஒரு காமெடியன்தான் என்று அவர் சொல்லிக்கொண்டாலும் அவரால் கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக கையாள முடியும் என்பதை இந்தப்படத்தின் வாயிலாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்

பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இயக்குநர் ஷான் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

கதையின் கரு

கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை; அவளது பெயர்தான் பெயர் பொம்மை நாயகி. 9வயது சிறுமியான பொம்மை நாயகி, அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஊர்க்காரர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட, சமூக ஆர்வலர்கள் சிலரால் விவகாரம் நீதிமன்றத்தை சென்றடைகிறது. ஆனால் அதன் பின்னர் இன்னொரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினையில் இருந்து விடுபட வேலு எடுக்கும் முயற்சிகளும், அதற்காக அவர் எடுத்த முடிவும்தான் பொம்மை நாயகி படத்தின் கதையாக நீள்கிறது.

யோகிபாபு நடிப்பு எப்படி? 

வேலுவாக யோகிபாபு நடித்திருக்கிறார். ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முழு நீள கதாநாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். அவர் தன்னை எப்போதுமே ஒரு காமெடியன்தான் என்று சொல்லிக்கொண்டாலும், அவரால் கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக கையாள முடியும் என்பதை இந்தப்படத்தின் வாயிலாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். படம் முழுவதும் எங்குமே அவர் சிரிக்கவில்லை.

மகளுக்கும், அப்பாவுக்கும் இடையேயான காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை திரையில் காண்பித்திருக்கிறார் இயக்குநர் ஷான்.

 சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார். படத்தில் வரும் ‘பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற,’ ‘தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன்’, ‘போற உயிரு போராடியே போகட்டும் சார்’ போன்ற வசனங்கள் இன்னும் சமுதாயத்தில் இருக்கும் தீண்டாமை தொடர்பான கொடுமைகளை கேள்வி எழுப்பும் விதமாக அமைந்திருக்கின்றன. உயர் சாதியினர் தவறு செய்தால் சொந்தமும் சட்டமும் அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது முழுவதுமாக ஏற்புடையதாக இல்லை என்றாலும், அதை விவாதத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி