தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘சொன்னா கேளுங்க பிக்பாஸ் வேணாம்’ - ரவீந்தருக்கு நோ சொன்ன மகாலட்சுமி - காரணம் என்ன தெரியுமா? - அவரே கூறிய விளக்கம்!

‘சொன்னா கேளுங்க பிக்பாஸ் வேணாம்’ - ரவீந்தருக்கு நோ சொன்ன மகாலட்சுமி - காரணம் என்ன தெரியுமா? - அவரே கூறிய விளக்கம்!

Oct 06, 2024, 07:07 PM IST

google News
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ரவீந்தர் நுழைவதற்கு மகாலட்சுமி நோ சொல்லி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே தற்போது கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ரவீந்தர் நுழைவதற்கு மகாலட்சுமி நோ சொல்லி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே தற்போது கூறியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ரவீந்தர் நுழைவதற்கு மகாலட்சுமி நோ சொல்லி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே தற்போது கூறியிருக்கிறார்.

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

ரவீந்தர்

 

நோ சொன்ன மகாலட்சுமி

அதற்கான பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொண்டு உள்ளார். உள்ளே நுழைந்த அவர் விஜய்சேதுபதியிடம், தன்னுடைய மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றார். இந்த நிலையில், அதற்கான காரணத்தை விஜய்சேதுபதி மகாலட்சுமியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த மகாலட்சுமி, “ ஆம், நான் முதலில் நோ தான் சொன்னேன். காரணம், வீட்டில் ஒரு சிறு வேலையை கூட செய்யமாட்டார். அப்படிப்பட்டவர் எப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் தனியாக சென்று எப்படி எல்லா வேலைகளையும் செய்வார் என்று பயந்தேன். அதுதான் காரணம். ஆனால், என்ன நடந்தாலும், யார் சொன்னாலும், அவர் கடைசியாக அவருக்கு தோன்றுவதைதான் செய்வார். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்” என்று பேசினார்.

யார் இந்த ரவீந்தர் சந்திரசேகர்

ரவீந்தர் சந்திரசேகர், ஜூலை 8, 1984 ஆம் ஆண்ட் சென்னையில், பிறந்தார். தமிழ் திரையுலகில் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன் ஹவுஸின் கீழ் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். அதோடு மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் படத்தை இயக்கி உள்ளார்.

 

மகாலட்சுமி!

2022 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியின் புகைப்படம் வெளியாகி வைரலானதால், பலரும் இந்த ஜோடியை விமர்சித்தனர். ஆனால், இதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத இந்த ஜோடி தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் டைமிங் சரியாக இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சிறைக்கு சென்றார். படம் எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பாலாஜி புகார் கொடுத்து இருந்தார்.

சிறையில் அனுபவித்த கொடுமை

இதனையடுத்து கைதான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு மாதத்திற்கு மேலாக புழல் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் பல்வேறு விதமான சேனலுக்கு யூடியூப் பேட்டி கொடுத்தார். அதில் தான் சிறையில் எப்படி கஷ்டப்பட்டேன் என்பதை உருக்கமாக பேசி இருந்தார்.

மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறிது காலம் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். வீடு திரும்பிய அவர் சிறை அனுபவத்தையும் கூறினார்.

பிக் பாஸ் விமர்சகர்

இவர் வருடம் தோறும் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல யூடியூப் சேனல் மூலமாக விமர்சனம் செய்து வருவார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவரே இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் எப்படி பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்வார் என்று பொறுமையாக இருந்து பார்க்கலாம்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி