தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss 7 Tamil Fat Man Says Archana Is Not The Winner

Bigg Boss 7 Tamil: அர்ச்சனா டைட்டில் வின்னர் இல்ல.. புது குண்டு வீசிய ரவீந்தர் சந்திரசேகரன்

Aarthi Balaji HT Tamil
Jan 14, 2024 11:40 AM IST

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா இல்லை என சொல்லப்படுகிறது.

பிக்  பாஸ்
பிக் பாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் தமிழ் 7 இன் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஆகியவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு இன்று ( ஜன 14) மாலை 6 மணிக்குத் தொடங்க உள்ளது.

மாயா, வி.ஜே.அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணிச்சந்திரா, விஷ்ணு ஆகியோர் தலைப்புக்காக போட்டியிடும் இறுதி ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன் வெற்றியாளர் பட்டத்தை விஜே அர்ச்சனா வென்று உள்ளார். கோப்பை மற்றும் ரொக்கப் பரிசைப் பெற்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற வரலாற்றை உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டம் அர்ச்சனா வென்றார் என பலரும் கொண்டாடி வரும் நிலையில் அவர் வெல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ரவீந்தர் சந்திரசேகரன் தனது யூடியூப் விமர்சனத்தில் சொல்லி உள்ளார்.

அதில், “ பிக் பாஸ் வின்னர் யார் என்ற தகவல் இன்று தான் தெரிய வரும். ஐந்தாவது இடத்தில் விஷ்ணு. பொதுமான ஆக்சன் பிளாக் இருந்தாலும் அதை காமெடி படமாக மாற்றிவிட்டார்கள். 13 வாரங்கள் ஓடிய படத்தை இந்த வாரத்துடன் முடித்துவிடுகிறார்கள்.

நடன இயக்குநரின் கதையாக இருந்தாலும், மக்கள் மனதை இந்த ஷோ முழுவதும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் மனதையும் கவர்ந்தார். நான்காவது இடத்தில் இருக்கிறார் மணி.

மூன்றாவது இடத்தில் அர்ச்சனா. அம்மன் கோயில்களில் ஏகப்பட்ட அர்ச்சனை செய்யப்பட்டாலும் அவருக்கு மூன்றாவது இடமே.

ஆரம்பத்தில் இருந்து விளையாட்டை விளையாடி மாயா, தினேஷ் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர்  " என்றார். 

ஊரே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என கொண்டாடி வரும் நிலையில் அது இல்லை என ரவீச்சந்திரன் சந்திரசேகரன் சொல்லியது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.