‘பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...’ அறுப்பாரா? அசத்துவாரா?- பிக்பாஸ் வீட்டிற்குள் பேச்சாளர்- யார் இந்த முத்துக்குமரன்?
Oct 07, 2024, 12:28 AM IST
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர், பேச்சாளர் முத்துக்குமரன் நுழைந்து இருக்கிறார். - யார் அவர்?
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் 8
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியினுள் தொகுப்பாளரும், பேச்சாளருமான முத்துக்குமரன் நுழைந்து இருக்கிறார். யார் அவர் என்பதை பார்க்கலாம்.
முத்துக்குரன் அம்மா படித்தது 7 வது என்றாலும், அவர் வீட்டு வேலைகள் பார்த்தது என்னவோ படிப்பை மட்டுமே ஆயுதமாக கொண்டு உயர்ந்தவர்களின் வீடுகளே. அதன் தாக்கம், அவருக்குள் அளவுக்கு மீறி இறங்க, அவரது கவனமும் வாசிப்பின் பக்கம் திரும்பியது. கூடவே தன் மகனான முத்துக்குமரனுக்கும் சிறு வயதில் இருந்தே புத்தகத்தை வாசிக்க வலியுறுத்துவதும், வானொலியில் மற்றவர்கள் பேசுவதை கேட்பதை கவனிக்கவும் வைத்திருக்கிறார்.
பேச்சு கொடுத்த அரிய வாய்ப்பு
அந்த பழக்கம் மெல்ல மெல்ல விருட்சமாகி அந்த பாதை முத்துக்குமரனை ஒரு தேர்ந்த பேச்சாளனாக மாற்றியது. ஒரு கட்டத்தில், சிவகங்கையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த முத்துக்குமரன் தனது வட்டாரத்தமிழாலும், பேச்சு வன்மையாலும் வாய்ஸ் ஓவர் ஆர்ட்ஸ்டிட்டாக மீடியா துறையில் காலடி வைத்தார்.
பிக்பாஸ் மேடையே அவரை சிவப்புக்கம்பளம்
தொடர்ந்து ஆங்கரிங்கில் காலடி பதித்தவர் அடுத்தடுத்தக்கட்டத்திற்கு உயர்ந்து, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பங்குபெற்று வெளிச்சம் பெற்றார். அந்த வெளிச்சம் அவருக்கு பல்வேறு மேடைகளைஅமைத்துக்கொடுக்க, தற்போது பிக்பாஸ் மேடையே அவரை சிவப்புக்கம்பளம் அமைத்து வரவேற்று இருக்கிறது. தமிழ் படித்தாலே அவன் பழம் போலதான் இருப்பான் என்ற சமூக கூற்றை மாற்றி, தன்னாலும் ஒரு சிறந்த பொழுது போக்காளனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவே உள்ளே செல்வதாக சொன்னார் முத்துக்குமரன்.. வாழ்த்துகள்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்