பிரித்து மேயும் பிக்பாஸ்; விருந்து வைக்கும் விஜய்சேதுபதி; விஜய் அள்ளிய வியூஸ் இவ்வளவா? - முழு விபரம் இங்கே!
Oct 19, 2024, 07:06 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை எவ்வளவு பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் தொகுப்பு எவ்வளவு பேருக்கு பிடித்திருக்கிறது உள்ளிட்ட விபரங்களை இங்கே பார்க்கலாம்.
‘Bigg Boss Tamil Season 8’ - நிகழ்ச்சி
‘Bigg Boss Tamil Season 8’ நிகழ்ச்சியானது Oct 6 ஆம் தேதி, 5 மணி நேர தொடக்கவிழாவுடன் பிரமாண்டமாக துவங்கியது. புதிய தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி, கமலுக்கு ஈடு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனையெல்லாம் தவிடு பொடியாக்கி, போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து, ஓட வைத்தார்.
குறிப்பாக விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, இடையிடையே அவர் கூறும் தத்துவங்கள் என அவரின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. அது ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
புதிய புதிய அம்சங்கள்
8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் கட்டமைக்கப்பட்டு இருந்தது. புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் ‘ஆண்கள் Vs பெண்கள்’ என சஸ்பென்ஸ்களால் நிறைந்திருந்த பிக்பாஸ் வீடு, முதல் வாரத்திலேயே ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மொத்தம் 18 போட்டியாளர்கள்
ரவீந்தர், சுனிதா, சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாந்த், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா என 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் எலிமினேஷன் என்று குண்டை போட்ட பிக்பாஸ், சாச்சானவை எலிமினேட் செய்து பின்னர் மீண்டும் உள்ளே கொண்டு வந்தார்.
ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.
ஸ்டாராங்கான போட்டியாளர் என்று கருதப்பட்ட ரவீந்தர் யாரும் எதிர்பாராத விதமாக முதல் வாரத்தில், குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளதாக கூறி வெளியேற்றப்பட்டார். முதல் வாரத்தில், விஜய்சேதுபதி போட்டியாளர்களை சகட்டுமேனிக்கு டோஸ் விட்ட நிலையில், உஷாரான போட்டியாளர்கள், இரண்டாவது வாரத்தில் இருந்து கேமை சீரியஸாக விளையாட ஆரம்பித்தனர்.
எவ்வளவு பேர் பார்த்து இருக்கிறார்கள்
தொடக்க எபிசோடு, தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR என சாதனை படைத்திருப்பது, நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்கள் டிவியில் மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்களின் வழியாகவும் பலர் இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்து வருகிறார்கள். எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் தொடர்பான விபரங்களை பார்க்கலாம்.
• முதல் வாரத்தில் 32 Mn+ பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்தனர்.
• 4.4 Bn+ நிமிடங்கள் (TV + Digital + Hotstar) நேரம் கொண்டாடப்பட்டுள்ளது.
• 162 Mn+ பார்வைகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, தினசரி இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்