தேம்பி தேம்பி அழுத ஜெஃப்ரி.. நக்கல் செய்து சிரித்த போட்டியாளர்கள்.. கட்டி அணைத்து சமாதானம் செய்த விஷால்!
Oct 16, 2024, 12:36 PM IST
மனம் வருந்திய ஜெஃப்ரி சிரிக்காதீர்கள் உங்களால் ஓட்டு போட முடிந்தால் போடுங்கள் உங்களிடம் வந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என நான் கேட்கவில்லை உங்களுக்கு விருப்பமா இருந்தா போடுங்க இப்படி சிரிக்காதீர்கள் என சொல்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது பத்தாவது நாள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பத்தாவது நாளில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் ப்ரோமோ ஜெஃப்ரி-யை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது. இதில் ஜெஃப்ரி என்னால் முடிந்தவரை என் டீமை விட்டுக் கொடுக்காமல் நான் என்னுடைய பங்கை சரியாக செய்தேன் என சொல்கிறார். பின்னர் சத்யா ஜெஃப்ரி என சொல்ல ஜாக்குலின், ஆனந்தி விஜே விஷால் இன்னும் சில சிரிக்கிறார்கள்.
மனம் வருந்திய ஜெஃப்ரி
இதனால் மனம் வருந்திய ஜெஃப்ரி சிரிக்காதீர்கள் உங்களால் ஓட்டு போட முடிந்தால் போடுங்கள் உங்களிடம் வந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என நான் கேட்கவில்லை உங்களுக்கு விருப்பமா இருந்தா போடுங்க இப்படி சிரிக்காதீர்கள் என சொல்கிறார்.
பிக் பாஸ் சொன்ன ஒரு கேள்விக்காக நான் இங்கு கட்டுப்பட்டு நிற்கிறேன் நீங்கள் ஓட்டு போட்டால் தான் நான் உள்ளே ஓட்டு போடவில்லை என்றால் நான் வெளியே அப்படி எல்லாம் இல்லை என குரல் தழுதழுக்க ஜெஃப்ரி கூறுகிறார்.
கட்டி அணைத்து சமாதானம் செய்த விஷால்
பின்னர் ஜெஃப்ரி, விஷால் வெளியில் கார்டன் ஏரியாவில் உள்ள சோபாவில் அமர்ந்து பேசும்போது விஜே விஷால் ஜெஃப்ரியிடம் மன்னிப்பு கேட்கிறார்.அப்பொழுது ஜெஃப்ரி தேம்பித் தேம்பி அழுகிறார். விஜே விஷால் கட்டி அணைத்து சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இப்படியாக இந்த பிரமோ முடிவடைகிறது.
இந்தப் பிரமோவை வைத்துப் பார்க்கையில் இப்பொழுது அனைவரும் ஜெஃப்ரி பக்கம் திரும்பியது போல தெரிகிறது. முன்னதாக ஜாக்குலின் ஜெஃப்ரியை ஏன் நீ பெண்கள் பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற குற்றச்சாட்டை வைத்தார்.
அனைத்திலும் புதிய நடவடிக்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியின் நறுக்கென்ற பேச்சுடன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என புதிய தொகுப்பாளர் முதல் புதிய விதிமுறைகள், புதிய வீடு என அனைத்திலும் புதிய நடவடிக்கைகளை இந்த சீசன் பிக்பாஸ் கொண்டு வந்துள்ளது.
முதல் நாளிலே எலிமினேட்
பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கலவரத்திற்கும், கண்டெண்ட்டிற்கும பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மற்ற எந்த சீசனிலும் இல்லாத வகையில் பல விதமான புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி எனப் பிரிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் போட்டி தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே சாச்சனா வீட்டிலுள்ள போட்டியாளர்களால் அதிக எண்ணிக்கையில் நாமினேட் செய்யப்பட்டதால் வெளியேற்றப்பட்டார்.
ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேட்
இதுதொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், வெளியேற்றப்பட்ட 3 நாட்களில் சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இதையடுத்து, அவர் பெண்கள் அணி எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை மக்கள் பார்வையிலிருந்து கூறி வந்தார். இதற்கிடையில், முதல் வார முடிவில், பிராங்க் விளையாட்டு ஆண்கள் அணியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையிலும், பெண்கள் அணியுடன் ஏற்பட்ட கருத்து முரணாலும் தன்னைத் தானே நாமினேட் செய்ததாலும், பேட் மேன் ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
டாபிக்ஸ்