Bigg Boss 7 Tamil: ‘கண்ணு பட்ருக்கும்ல’ - வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் ராஜமாதா.. அதகள பார்ட்டியில் ஆட்டம்! - வைரல் வீடியோ!
Jan 08, 2024, 08:45 AM IST
அவர் வெளியேறிய உடன் அவருக்கான பார்ட்டி நடந்து இருக்கிறது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. வரிசையாக ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் விசித்ரா வெளியேற்றப்பட்டார்.
ஆரம்பத்தில் சில சர்ச்சைகளை சந்தித்த விசித்ரா, அதில் நேர்மையாக நடந்து கொண்ட விதம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அர்ச்சனாவை புல்லி கேங்க் தாக்கும் போது, உடன் நின்று பாதுகாத்த போது அவரது இமேஜ் இன்னும் உயர்ந்தது.
ஆனால் அதன் பின்னர் அவரிடம் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் சில அதிருதியை ஏற்படுத்தின. குறிப்பாக கடைசி வாரத்தில் அவர் வீட்டிற்குள் செய்த சில நடவடிக்கைகள் அவரது உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காண்பித்தது. அதனுடைய விளைவுதான் அவர் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது என்று விமர்கர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், அவர் வெளியேறிய உடன் அவருக்கான பார்ட்டி நடந்து இருக்கிறது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
விசித்ரா வெளியேற்றப்பட்டது குறித்து வனிதா முன் வைத்த விமர்சனம் இங்கே!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து தன்னுடைய விமர்சனத்தை இந்தியா கிளிட்ஸ் சேனலில் பேசி இருக்கிறார் வனிதா.
அவர் பேசும் போது, “எல்லோரும் எதிர்பார்த்தது போல விசித்திரா தான் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
இந்த எவிக்ஷன் நடைமுறை எப்படி நடைபெறுகிறது ஹாட்ஸ்டாரில் வரும் ஓட்டுகளை வைத்து நடைபெறுகிறதா? அல்லது வெப்சைட்டில் விழும் ஓட்டுகளை வைத்து சேனல் முடிவு எடுக்கிறதா என்பதை சில குழப்பங்கள் இருந்தன. இது தொடர்பான குற்றச்சாட்டை நானும் பலமுறை முன் வைத்திருக்கிறேன்.
காரணம் என்னவென்றால் அந்த ஓட்டுகளின் அடிப்படையில் இல்லாமல் சேனலின் முடிவின் அடிப்படையில், போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதில் நிக்சனும் ஒருவர். மாயாவிற்கு வீட்டில் இருக்கக்கூடிய முக்கால்வாசிபேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். நானும் அவருடைய ரசிகர் தான் காரணம் என்னவென்றால்,அவருடைய நடவடிக்கைகள் பிக் பாஸ் நிகழ்ச்சி நகர்வதற்கு ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
பூர்ணிமாவை பொறுத்தவரை அவர் தனக்கு பதினாறு லட்சம் போதும் என்று எடுத்துச் சென்று விட்டார். அது அவர் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளில் மிக முக்கியமானது. அவர் ஒரு குழப்பத்திலிருந்து வெளியே வந்து விட்டார் என்று கூட சொல்லலாம்.
அர்ச்சனாவை பொருத்தவரை அவருக்குப் பின்னால் பி ஆர் ஒருவர் இயங்குகிறார். அவர் இவரை நிகழ்ச்சியில் நன்றாக காண்பதற்கான வேலையை செய்கிறார். சேனலும் அதை அனுமதிக்கிறது.
இந்த நிலையில்தான் நேற்று நடந்த விசித்ராவின் எவிக்ஷன் எனக்கு ஒரு நம்பிக்கையை தந்திருக்கிறது. காரணம் என்னவென்றால், இவ்வளவு நாட்கள் அவர் வாங்கிய நல்ல பெயர்கள் எல்லாம், இந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் தடம் மாறியது என்று சொல்லலாம்.
அவர் செய்த சில விஷயங்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது உண்மைதான். அதன் அடிப்படையில் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருப்பது என்பது மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் தான், நிகழ்ச்சி நகர்கிறது என்று ஒரு நம்பிக்கையை தந்திருக்கிறது
விசித்ரா வெளியேற்றப்பட்டதை நான் ஒரு நியாயமான விஷயமாக பார்க்கிறேன். உண்மையில் அவர் மக்களை ஏமாற்றினார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்