Bigg Boss Tamil Season 7: பிரதீப் சொன்ன கமெண்ட்.. டென்ஷனான விசித்ரா.. கடுப்பின் உச்சத்தில் பிக்பாஸ்! - ரணகளமான வீடு!
Oct 03, 2023, 10:32 AM IST
CWC Vichithra vs pradeep anthony: பிக்பாஸ் சீசன் 7 -ன் இன்றைய புரமோவில் விசித்ராவும், பிரதீப் ஆண்டனி சண்டைப்போட்டுக்கொள்கிறார்கள். காரணம் தெரிய வேண்டுமா?
அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் நாள், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதன்படி, கூல் சுரேஷ், அனன்யா, நிக்சன், ஐஸ்வர்யா, விசித்ரா, ரவீணா, வினுஷா தேவி, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி. விஷ்ணு, பவா செல்லதுரை, ஜோவிகா, பூர்ணிமா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், விஜய் வர்மா என மொத்தம் 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நேற்றைய தினம் இரு வீடுகள் பிரிக்கப்பட்டு, அதில் கேப்டன் விஜய் வர்மா நாமினேட் செய்த போட்டியாளர்கள், இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள்தான் மொத்த வீட்டிற்கும் சமைக்க வேண்டும் என்று பிக்பாஸ் விதிமுறை வகுத்த நிலையில், நீ என்ன சொல்வது.. நான் என்ன கேட்பது என்பது போல, பிக்பாஸ் சொன்னதற்கு மாறாக யுகேந்திரனும், விசித்ராவும் சமையலில் இறங்கினர்.
இதனால் கோபமான பிக்பாஸ், இருவரையும் இரண்டாவது வீட்டில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை போட்ட அடுத்த கணமே, பிரதீப் அப்படியென்றால் அங்கிருந்து இரண்டு பேரை மெயின் வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்றார்.
அவ்வளவுதான்.. விசித்ரா கொந்தளித்து விட்டார். தொடர்ந்து பிரதீப்பிடம் அது எப்படி நீ அப்படி சொல்லலாம் என்று கேட்க, நீங்கள் இரண்டு பேர் அங்கு சென்று விட்டீர்கள் என்றால், எங்களுக்கு கடன் அடைக்க இரண்டு பேர் வேண்டுமா அல்லவா? என்று வாதம் செய்தார் பிரதீப்.
இதற்கு பதிலடி கொடுத்த விசித்ரா, எங்களை விட ஸ்டாராங்கான போட்டியாளர்கள் அங்கு இருக்கிறார்களா? என்று தீபக்கிடம் சண்டைக்கு சென்று விட்டார். இதனைக்கேட்டு கடுப்பான கேப்டன் விஜய் வர்மா, என்ன பேசுகிறீர்கள் என்பதை புரிந்துதான் பேசுகிறீர்களா? என்று காட்டாமாக பேசி முடிக்க, அத்தோடு புரமோ முடிகிறது.
டாபிக்ஸ்