தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடித்து ஓடிய 60 நாட்கள்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய 2 பேர் யார் யார்?

அடித்து ஓடிய 60 நாட்கள்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய 2 பேர் யார் யார்?

Dec 07, 2024, 09:49 PM IST

google News
அடித்து ஓடிய 60 நாட்கள்.. இரண்டு பேருக்கு செக்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறிய 2 பேர் யார் யார்?
அடித்து ஓடிய 60 நாட்கள்.. இரண்டு பேருக்கு செக்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறிய 2 பேர் யார் யார்?

அடித்து ஓடிய 60 நாட்கள்.. இரண்டு பேருக்கு செக்.. விரட்டியடித்த விஜய் சேதுபதி.. - பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறிய 2 பேர் யார் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. 

போதா குறைக்கு நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை  பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், இந்த வாரம் நடந்த டெவில், ஏஞ்ஜல் டாஸ்க்கில் பலரது உண்மையான முகத்திரை கிழிந்தது.

யார் யாருக்கு வீட்டில் இடம்? 

முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தற்போது வீட்டிற்குள் பவித்ரா ஜனனி, ராயன், ஜாக்குலின், சத்யா, ரானவ், ரஞ்சித், முத்துக்குமரன், சச்சனா நமிதாஸ், மஞ்சரி நாராயணன், தர்ஷிகா, சௌந்தரியா நஞ்சுதன், ஆர்.ஜே.ஆனந்தி, ஜெஃப்ரி ஆகியோர் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்தும் இன்னும் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அதிகம் உள்ளதால், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் வெளியேற போவது யார்? 

கடந்த வாரத்தை போலவே முத்துக்குமரன் அதிக வாக்குகள் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. எலிமினேஷனில் 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில், ராயன் மற்றும் ரஞ்சித் இருவரில் ஒருவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம், தர்ஷிதா வெளியேற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆர். ஜே. ஆனந்தியும், சாச்சனாவும் போட்டியில் இருந்து வெளியேற்ற பட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி