Bigg Boss Tamil 7: ‘நீங்க பண்ண கேலி கூத்து..உங்க அப்பா செருப்பால அடிக்கப்போறாங்க.. நானா இருந்திருந்தா’- விசித்ரா கணவர்!
Nov 08, 2023, 06:00 AM IST
ஐஸ்வர்யா தன்னுடைய பெண்ணாக மட்டும் இருந்திருந்தால், கடுமையாக தண்டித்துருப்பேன் என்று அண்மையில் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் விசித்ரா கணவர் பேசியிருக்கிறார்.
இது குறித்து விசித்ரா கணவர் பேசும் போது, “ வனிதா விசித்ராவை பற்றி பேசும் பொழுது, அவரது படிப்பை பற்றி பேசினார். அப்போது அவர், இந்த படிப்பு தொடர்பான சான்றிதழ்களையெல்லாம் எந்த கடையில் வாங்கினீர்கள் என்றெல்லாம் பேசினார். அது எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அது அவரது நிலைமை. அதற்கு நாங்கள் ரிப்ளை கொடுத்தால், அவருக்கும் எங்களுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லாமல் ஆகிவிடும்.
நீங்கள் சில நபர்களை, சில நேரங்களில், ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. விசித்ரா பிரதீப்பை ஆதரிக்கவில்லை. பெண்கள் பாதுகாப்பு விஷயம் தொடர்பாக பிரச்சினை எழுப்பியவர்களில் ஐஸ்வர்யாவும் அக்ஷயாவும் உண்டு. இவர்கள் இரண்டு பேரும், இரண்டு நாட்களுக்கு முன்னதாக பிரதீப்பை கட்டி பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.
உனக்கு பாதுகாப்பு இல்லை என்று தோன்றினால், ஏன் அவர் பக்கத்தில் செல்கிறீர்கள். எனக்கு சிரிப்பான விஷயம் என்னவென்றால், ஐஸ்வர்யா இதனை என்னுடைய பெற்றோர் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். என்னுடைய கேள்வி என்னவென்றால், ஏன் நேற்று வரை உங்களுடைய பெற்றோர் உங்களை இந்த நிகழ்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கவில்லையா.. ? நீங்கள் பண்ணிக் கொண்டிருந்த கூத்தை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா..? ஐஸ்வர்யா வெளியே வந்தவுடன், அவரை அவரது குடும்பத்தினர் செருப்பால் அடிப்பார்கள்.. ஐஸ்வர்யா என்னுடைய பொன்னாக மட்டும் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக தண்டித்து இருப்பேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்