தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 6: அசீமை ஆதரிக்கவும் விக்ரமனை எதிர்க்கவும் இதுதான் காரணம்-நவீன்

Bigg Boss Tamil 6: அசீமை ஆதரிக்கவும் விக்ரமனை எதிர்க்கவும் இதுதான் காரணம்-நவீன்

Jan 25, 2023, 02:39 PM IST

அனைவரும் அரசியல்மயமாக வேண்டும் என்று தனக்கு கிடைக்கும் இரண்டு நாட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் @ikamalhaasan சாருக்கு நன்றி என்று நவீன் தெரிவித்துள்ளார் (Bigg Boss Truth (Facebook))
அனைவரும் அரசியல்மயமாக வேண்டும் என்று தனக்கு கிடைக்கும் இரண்டு நாட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் @ikamalhaasan சாருக்கு நன்றி என்று நவீன் தெரிவித்துள்ளார்

அனைவரும் அரசியல்மயமாக வேண்டும் என்று தனக்கு கிடைக்கும் இரண்டு நாட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் @ikamalhaasan சாருக்கு நன்றி என்று நவீன் தெரிவித்துள்ளார்

பிக்பா நிகழ்ச்சியில் அசீமை ஆதரிக்கவும் விக்ரமனை எதிர்க்கவும் இதுதான் காரணம் கமலுக்கு நன்றி என்று இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.
கமலின் பிக் பாஸ் 6 ஆவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் அசீம் டைட்டில் முதலிடம் பெற்று வெற்றியை தட்டிச்சென்றார். இரண்டாவது, இடத்தை விக்ரமனும் மூன்றாவது மற்றும் ஷிவினும் பிடித்தனர். வெற்றி பெற்ற அசீமிற்கு பலர் வாழ்த்து தெரிவித்தினர். ஆனால் அசீமின் வெற்றி குறித்து பலர் கடுமையாக விமர்சன கருத்துகளை சமூக வலைதளங்களில் முன் வைத்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ghilli ReRelease Box office: ‘வேலு ஆட்டம் வெறித்தனம்’.. ரெக்கார்டு படைத்த கில்லி.. - பாக்ஸ் ஆபிஸ் வசூல் இங்கே தெரியுமா?

Vetrimaran: கோலிவுட்டிற்கு அடுத்த ஜாக்பாட்.. வெற்றிமாறனுடன் கூட்டு சேர்ந்த ஐசரி கணேஷ்.. - முழு விபரம் உள்ளே!

Yugendran on Vijay: அய்யய்யோ.. என்ன இப்படி சொல்லிட்டார்; விஜய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? - கோட் சீக்ரெட்டை உடைத்த யூகே!

19 வயசுல சினிமாவில் வந்து உச்சத்தில் பறக்கும் நடிகைகள்.. இவங்களோட சம்பளம் எல்லாம் இப்ப வேற லெவல்!

இந்நிலையில் வெற்றி பெற்ற அசீம் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில், "எம் மக்களுக்கு வணக்கம். பல்வேறு தளங்களில் உங்கள் ஆதரவு வருவதைக் கண்டு நான் திகைத்து நிற்கின்றேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மக்களே. எம் மக்களை உயிர் உள்ளவரை நான் மறவேன். நான் பெற்ற அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. நான் உறுதியளித்தபடி, எனது வெற்றித் தொகையில் 25,00,000 லட்சம் ரூபாய்யை கோவிட்-19 காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இயக்குநர் நவீன் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்

நவீன்

‘தான் ஒரு திமுக official spokesman என்று சொல்லும் சகோதரர் அசீமை, திமுகவினர் பலர் எதிர்க்கின்றனர். காலம் முழுதும் திமுக கலைஞர் எதிப்பு பேசும் கட்சியினர் ஆதரிக்கின்றனர். இது அசீம் ஆதரவு எதிர்ப்பு என்பதைவிட @RVikraman பேசும் சித்தாந்தத்திற்கான ஆதரவு எதிப்பாகவே நான் பார்க்கிறேன்.

தீவிர இந்துத்துவம் பேசுவோர் கூட இந்து பெயர் கொண்ட @RVikraman தோல்வியையும், இஸ்லாமியரான அசீம் வெற்றியையும் கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர் பலர் அசீமை எதிர்க்கின்றனர். இதுதான் தமிழ்நாடு. இங்கு எக்காலத்திலும் மதம் பிரச்சனையல்ல. சமூகநீதிக்கான எதிர்ப்பும் ஆதரவும்தான் தமிழ்நாட்டு அரசியல்

106 நாட்கள் @RVikraman பேசிய சமத்துவ கருத்துகளை ஆதரித்து ஊக்குவித்து, புத்தக பரிந்துரைகள் செய்து, அனைவரும் அரசியல்மயமாக வேண்டும் என்று தனக்கு கிடைக்கும் இரண்டு நாட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் @ikamalhaasan சாருக்கு நன்றிகள். இவ்வாறு தனது பதிவில் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.