தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: வச்சு செய்யணும்.. சகுனியாக மாறிய மாயா.. கடுப்பான ரசிகர்கள்

Bigg Boss 7 Tamil: வச்சு செய்யணும்.. சகுனியாக மாறிய மாயா.. கடுப்பான ரசிகர்கள்

Aarthi V HT Tamil

Oct 13, 2023, 11:58 AM IST

google News
Bigg Boss 7 Tamil promo: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Bigg Boss 7 Tamil promo: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Bigg Boss 7 Tamil promo: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7 ஆவது சீசனில் இரண்டு வீடு வைத்தாலும் வைத்தார்கள் எப்போது பார்த்தாலும் இரு வீட்டிற்கும் இடையே சண்டை வெடித்து வருகிறது. சோறு பிரச்னை ஆரம்பித்து டாஸ்க் வரை திரும்பும் இடம் எல்லாம் சண்டை தான்.

இன்றைய நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் வழக்கம் போல் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது மாயா, " நீயும் அவங்க கூட போய் சேர்ந்துக்கோ. இல்லனா உன்னையும் நாமினேட் செய்வாங்க” என சொல்ல பூர்ணிமா இதுதான் என்னுடைய கடைசி வாரம் என இரண்டு நாள் முன்பே தோன்றுகிறது என்றார்.

அதற்கு மாயா, நீ எல்லாம் இல்லனா நானும் வெளியில் வந்துருவேன். இவங்க கூட எல்லாம் மனுஷன் வாழ முடியாது. இந்த முறை ஐஷுவை கேப்டனாக இறக்கினால், நாம தெறிக்க விடலாம். ஜோவிகா மற்றும் யுகேந்திரனை டார்கெட் செய்து இவர்களை நாம வச்சு செய்யணும். நம்மகிட்ட வச்சிக்கவே கூடாது அப்படிங்கிற அளவுக்கு வச்சு செய்யணும்” என்றார்.

இந்த வாரம் எலிமினேஷ இல்லை என்பதால் பூர்ணிமா நினைப்பு தவறாக தான் போக போகிறது. மேலும் மாயா பேச்சை கேட்டு, இனிமேல் உன்னை டார்க்கெட் செய்து எடுப்பது தான் எங்கள் முதல் வேலை என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இரண்டு வீடுகளுக்கும் இடையே பகை முற்றிப்போய் இருக்கிறது. இந்த ப்ரோமோ மூலம் இன்றைய எபிசோடும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி