Bigg Boss 7 Tamil: விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்க ஆசை.. சர்ச்சை கிளப்பிய பிரதீப்
Oct 06, 2023, 02:24 PM IST
Pradeep Antony: பிக் பாஸ் வீட்டில் பிரதீப் செய்யும் சில செயல்களை அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் தோற்று போனால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக் பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பிரதீப், மேக்கப் கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் தெரியவரும், அதனை பார்க்க விரும்புவதாக கூறினார்.
இந்நிலையில் பிரதீப், அடுத்த டாஸ்தில் தோற்று போனால் ஆண், பெண் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்ற தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். மேலும் விசித்ராவுடன் ஒரே பெட்டில் ஒன்றாக படுக்க ஆசைப்படுவதாக கூறினார்.
இதற்கு விசித்ரா, “ என் கூட ஒரே பெட்ல படுக்கணுமா, உன்னால முடியுமா?. வார்த்தையை பார்த்து பேச வேண்டும். பிக் பாஸ் இது நடந்தே ஆக வேண்டும்” என ஆவேசப்பட்டார்.
பிக் பாஸ் 7 ஆவது சீசன் கடந்த வாரம் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகச் சென்று கொண்டு இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளிலிருந்தே இந்த முறை கடும் சண்டை நடக்கிறது. குறிப்பாக பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா இடையே அடிக்கடி முட்டிக்கொள்கிறது. வீட்டில் இருக்கும் பலரும் பிரதீபிற்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.