Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா..விஜய் வீட்டின்முன் மது அருந்திவிட்டு சலம்பிய திரிஷா.. பயில்வான் ரங்கநாதன் பகீர்
Aug 25, 2024, 04:19 PM IST
Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா..விஜய் வீட்டின்முன் மது அருந்திவிட்டு சலம்பிய திரிஷா.. என மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா வாங்கி தந்த விஜய் என்றும், திரிஷாவுடன் லிவிங் டூ கெதரில் வாழும் விஜய் என்றும் வரும் செய்திகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் விரிவான பேட்டியளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக ஜூன் 28ஆம் தேதி பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’TVK என்றால் தமிழக வெற்றிக் கழகம். அதைவிட்டுட்டு சிலர் திரிஷா - விஜய் - கீர்த்தி சுரேஷ் அதனுடைய சுருக்கம் தான், TVK அப்படின்னு சொல்றாங்க. இப்போது விஜய்யுடைய லட்சியம், 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது. எப்படியாவது முதலமைச்சர் கட்டிலில் உட்காருவது தான் அவருடைய நோக்கம். அதனால் தான் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது முதல் நபராக அங்கு சென்று விசாரித்தது, நடிகர் விஜய் தான்.
அப்போதும் ஒரு சர்ச்சையில் விஜயை சிக்க வைக்கப் பார்த்தாங்க. ஒரு அம்மா போய் விஜய்யின் காலில் விழுந்ததும் அப்போதும் அது செட் அப் என்று சிலர் முணுமுணுத்தார்கள். போதாது என்று, அந்த அம்மாவிடமே போய் ஏன் காலில் விழுந்தீர்கள் என்று கேட்கின்றனர். உடனே அந்தம்மா, விஜயைப் பார்த்தால் என் மகன் போல் தோன்றியது. அதனால் தான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார். இப்படியெல்லாம் விஜயைப் பற்றி கொளுத்திப்போட்ட சம்பவங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
விஜய் செய்த அந்த செயல்:
நடிகர் விஜய் தனது 50ஆவது பிறந்தநாள் வந்தபோது, தனக்கு பிறந்தநாள் கொண்டாடவேண்டாம். விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்களுக்கு அந்த செலவுத்தொகையை கொடுங்க என்று சொல்லிவிட்டார். அதனால் பிறந்தநாள் கொண்டாட்ட விழா இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நிறைய நடிகர், நடிகைகள் எல்லாம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடைசி நேரத்தில் திரிஷா, விஜய் கூட லிஃப்ட்டில் எடுத்த படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் என நடிகர் விஜய்க்கு கூறியிருந்தார். அதனைப் பார்த்த சிலர், விஜய்யோடு திரிஷா லிவ்-விங் டூ கெதரில் இருக்கிறாங்க, வெளிநாடுகளில் எல்லாம் சுற்றிக்கொண்டு இருக்கிறாங்க அப்படின்னு கொளுத்திபோட்டுட்டார். இதே மாதிரி தான், பனி படர்ந்த மலையில் விஜய்யும் திரிஷாவும் இருக்கிற படத்தை, தவறாக சித்தரிச்சு கிசுகிசுவை கொளுத்திபோட்டார்கள். பின்னர், தயாரிப்பு நிர்வாகமே, அது படத்தின் சூட்டிங்கில் எடுக்கப்பட்ட படம் என்று கூறிய பின் தான் கிசு கிசு அடங்கியது. அதேமாதிரி இந்தப்படமும் படப்பிடிப்பு இடைவெளியில் எடுக்கப்பட்ட படம் எனத் தெரிகிறது. ஆனாலும், சிலர் விஜய்க்கு எதிராக வதந்தியைக் கிளப்பிட்டார்கள்.
விஜய் வீட்டை நெருங்கி வந்து குடியேறிய நடிகைகள்:
அதேமாதிரி கீர்த்தி சுரேஷும் வாழ்த்து தெரிவித்ததைப் பார்த்து, கீர்த்தி சுரேஷும் விஜய் உடன் நெருக்கமாக இருக்கிறார்கள் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதற்கு காரணம் என்னவென்றால், விஜய் வீட்டுக்குப் பக்கத்தில் கீர்த்தி சுரேஷூம் திரிஷாவும் குடிவந்துவிட்டார்கள் என்பது தான். ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், விஜய் வீட்டுக்கு முன்பு மது அருந்திவிட்டு திரிஷா டான்ஸ் ஆடி அவமானப்படுத்துனாங்க என்று செய்தி வந்தது.
விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையில் ஒரு நெருக்கம் இருந்தது உண்மை தான். ஏனெனில், இருவரும் தொடர்ந்து நடித்து வந்தார்கள். முன்னதாக, விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளை அவரது மனைவி சங்கீதா தேர்வு செய்துவந்தார். சமீபகாலமாக,விஜய் மனைவியின் பேச்சை கேட்காமல், தன்னிச்சையாக தன் கதாநாயகிகளைத் தேர்வுசெய்கிறாராம். அன்று முதல் வீட்டில் குழப்பம் நீடிக்கிறது. இதனால், அவ்வப்போது விஜய் வெளிநாடு போய்விடுகிறார். இதனிடையே ஒவ்வொரு பட விழாவுக்கும் மனைவியுடன் வந்த விஜய், தனியாக வர ஆரம்பித்தார்.
பின் அப்பாவுடன் சண்டைபோட்ட விஜய், சமீபத்தில் சமரசம் ஆகிவிட்டார். தாய்க்காக விஜய் கட்டிக்கொடுத்த சாய் பாபா கோயில் மகனுக்காக தினமும் வேண்டி வருகிறார். புதிய மாற்றினை விரும்பும் மக்கள், விஜய் கட்சியை ஆதரிப்பார்கள் என்பது புரிகிறது. மேலும் தனக்கு கோடியாய் அள்ளித்தரும் சினிமாவையே வேண்டாம் என்று சொல்லும் விஜய், திரிஷாவையும் கீர்த்தி சுரேஷையும் பிரதானம் எனக் கருதுவார். வி ஜய் மீது பொறாமைப்படுபவர்கள் தான், கீர்த்தி சுரேஷுக்கு பங்களா வாங்கி கொடுத்தார் என்று கூறுவதும் பொய், திரிஷாவுடன் விஜய் லிவ்விங் டூ கெதரில் இல்லை என்பதும் தான் உண்மை'' என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.
நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!