TOP 10 Cinema News: வசூல் வேட்டையில் சூரி.. விஜய் வீட்டிற்கு வந்த காரணத்தை சொன்ன பிரேமலதா-top 10 cinema news on august 24 2024 indicates premalatha told why vijay came home - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: வசூல் வேட்டையில் சூரி.. விஜய் வீட்டிற்கு வந்த காரணத்தை சொன்ன பிரேமலதா

TOP 10 Cinema News: வசூல் வேட்டையில் சூரி.. விஜய் வீட்டிற்கு வந்த காரணத்தை சொன்ன பிரேமலதா

Aarthi Balaji HT Tamil
Aug 24, 2024 08:48 PM IST

TOP 10 Cinema News: விஜய் வீட்டிற்கு வந்த காரணம் தொடர்பான காரணத்தை பிரேமலதா கூறினார்.

TOP 10 Cinema News: வசூல் வேட்டையில் சூரி.. விஜய் வீட்டிற்கு வந்த காரணத்தை சொன்ன பிரேமலதா
TOP 10 Cinema News: வசூல் வேட்டையில் சூரி.. விஜய் வீட்டிற்கு வந்த காரணத்தை சொன்ன பிரேமலதா

நடிகர் அருண்

பிக் பாஸ் 8 ஆவது சீசனில் போட்டியாளராக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் களமிறங்கப்போகிறார் என பேசப்பட்டு வருகிறது.

இறுதி கட்டத்தில் கேம் சேஞ்சர்

ராம் சரணின் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படத்திற்காக மிகவும் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ரவி தேஜாவுக்கு அறுவை சிகிச்சை

ஹீரோ ரவி தேஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என சொல்லப்படுகிறது.

கல்கி VS ராயன்

அமேசான் பிரைம் ஓடிடியில் பிரபாஸ் கல்கியை முந்தியிருக்கிறார் தனுஷ் ராயன்.

வீட்டிற்கு வருவது புதியது அல்ல

விஜய் விசிட் தொடர்பாக பிரேமலதா பேட்டியில், விஜய் எங்கள் வீட்டிற்கு வருவது புதியது அல்ல, அவர் பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். எனது மகன் சண்முகப் பாண்டியன் நீங்கள் தான் எங்களுக்கு சினிமாவில் ரோல் மாடல் என விஜய்யிடம் கூற உடனே அவர் நீதான் எனக்கு அரசியலில் சீரியர் என்று சொன்னார் என்றார்.

மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா?. கார்த்திக் குமார் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க போகிறாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி உள்ளார் பாடகி சுசித்ரா.

புது மருமகளுக்காக நாகார்ஜுனா எடுத்த மாற்று முடிவு

நடிகர் நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது வருங்கால மருமகள் சோபிதாவுக்கும் அதில் விருப்பம் இல்லையாம்.

முதல் நாள் வசூல்

கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, முதல் நாள் இந்த படம் ரூ. 45 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

அருள்நிதி புது படம் என்ன

டிமாண்டி காலனி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி, Bumper படத்தின் இயக்குநர் எம் செல்வகுமார் உடன் கூட்டணி வைத்துள்ளார்.

பிரபாஸை விமர்சித்த நடிகர்

இந்தி நடிகரான அர்ஷத் வர்சி, கல்கி படத்தில் பிரபாஸின் நடிப்பு பார்ப்பதற்கு காமெடியாக இருந்ததாக கூறினார். இதற்கு அவரது ரசிகர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.