தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raadhika: கேரவனில் கேமராவா? ‘உனக்கு தைரியம், திராணி இருந்தா; அந்தர் பல்டி அடித்த ராதிகா! - வெளுத்த பயில்வான்!

Raadhika: கேரவனில் கேமராவா? ‘உனக்கு தைரியம், திராணி இருந்தா; அந்தர் பல்டி அடித்த ராதிகா! - வெளுத்த பயில்வான்!

HT Tamil Desk HT Tamil

Sep 06, 2024, 08:32 AM IST

google News
Raadhika: நடிகர்களின் கேரவனில் பாத்ரூமில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அது சார்ந்த வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப்பையன் கூறியதாகவும் பேசி இருந்தார். - வெளுத்த பயில்வான்!
Raadhika: நடிகர்களின் கேரவனில் பாத்ரூமில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அது சார்ந்த வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப்பையன் கூறியதாகவும் பேசி இருந்தார். - வெளுத்த பயில்வான்!

Raadhika: நடிகர்களின் கேரவனில் பாத்ரூமில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அது சார்ந்த வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப்பையன் கூறியதாகவும் பேசி இருந்தார். - வெளுத்த பயில்வான்!

நடிகை ராதிகா, மலையாள படம் ஒன்றில் தான் நடிக்கும் போது அந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் கேரவனில் கேமரா பொருத்தி, பெண்களின் அந்தரங்கங்களை பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், அது குறித்து பிரபல விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பிரச்சினையை திசை திருப்புவதற்காகதான் இந்த ஹேமா கமிட்டி அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே கேரளா அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால், கேரள அரசு இப்போதுதான் அதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராதிகா

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டிலிருந்து பல பெண்கள் குரல் கொடுத்து இருந்தார்கள். அதில் முக்கியமானவர் தொலைக்காட்சி நடிகை, சினிமா நடிகை, தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார். இந்த விவகாரத்தில் அவர் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார். 

கேரவனே கிடையாது 

அந்த குற்றச்சாட்டில், மலையாளம் படம் ஒன்றில் தான் நடிக்கும் பொழுது, திடீரென்று அந்தப்படத்தின் நடிகர்கள் தன்னைப் பார்த்து சிரித்தார்கள் என்றும் இதையடுத்து அங்கு வேலை செய்யும் ஒரு பையனிடம் இது குறித்து கேட்ட போது, நடிகர்களின் கேரவனில் பாத்ரூமில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அது சார்ந்த வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப்பையன் கூறியதாகவும் பேசி இருந்தார்.

 

ராதிகா

உண்மையில் ராதிகா அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும். அந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த நபர்களை செவிளில் பளார் பளார் என்று அடித்து, போலீசில் புகார் கொடுத்திருந்தால், ராதிகாவை அன்றைய தினமே இந்த திரையுலகம் கொண்டாடி இருக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு ராதிகா தனக்கு இப்படி நடந்தது என்பதை இப்போது இந்த பரபரப்பிற்கு இடையே பேசி இருக்கிறார்

கிடுக்குப்பிடி போட்ட காவல்துறை

இதை பார்த்த கேரள காவல்துறை, ராதிகாவிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்ல. அவர் அந்தர் பல்டி அடித்துவிட்டார். ஆம் ராதிகா காவல்துறையிடம், நான் பெயரையெல்லாம் சொல்ல மாட்டேன் கூறிவிட்டார். உண்மையில், உங்களுக்கு தைரியம், திராணி இருந்தால், தைரியமாக இவர்கள் தான் மலையாள திரையுலகில் அந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியது தானே.. அவர் செய்தது படுத்து கிடந்து, அவர் மீதே அவர் எச்சில் துப்புவது போல ஆகிவிட்டது. உண்மையில் சொல்லப்போனால் அவர் சொன்ன காலத்தில் மலையாளத்தில் கேரவனே கிடையாது.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி