தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'டிஸ்கோ டான்சர்'… பப்பி லஹரியின் ஹிட்ஸ்

'டிஸ்கோ டான்சர்'… பப்பி லஹரியின் ஹிட்ஸ்

Aarth V HT Tamil

Feb 17, 2022, 12:48 PM IST

google News
இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரியின் உயிர் பிரிந்து சென்றாலும், அவரின் இசையின் தாக்கமானது என்றும் நினைவில் இருக்கும் வல்லமை கொண்டது.
இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரியின் உயிர் பிரிந்து சென்றாலும், அவரின் இசையின் தாக்கமானது என்றும் நினைவில் இருக்கும் வல்லமை கொண்டது.

இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரியின் உயிர் பிரிந்து சென்றாலும், அவரின் இசையின் தாக்கமானது என்றும் நினைவில் இருக்கும் வல்லமை கொண்டது.

பப்பி லஹரி இந்தப் பெயர் 70 களில் மிகவும் பிரபலமான பெயர். அதுமட்டுமில்லாமல் அந்தக் காலகட்டத்தில் இசைத்துறையில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயரும் பப்பி லஹரி தான். இவரின் பெயரை விட இவரின் இசையானது பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. 

1970 களில் மேற்கத்திய இசையான ’டிஸ்கோ’ என்ற இசை வடிவத்தை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி அசுர வெற்றிக்கண்டவர். இவரது இசையில்  இடம்பெற்ற "ஐ அம் ஏ டிஸ்கோ டான்சர்" என்ற பாடல் ஒலிக்காத இடமே இல்லை. 

இன்று வரை அந்தப் பாடலின் "ஹூக்" டுயூன்னுக்கு ஆட்டம் போடாத கால்களே இல்லை. இவர் பாலிவுட் திரையுலகில் வெற்றிக் கண்டது மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நிறைய வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார்.

அப்படி தமிழில் இவர் இசையமைத்தது மூன்று படங்கள் மட்டுமே என்றாலும் அதனுடைய தாக்கம் மிக எளிதில் மறக்க தக்கது அல்ல. அப்படி அவர் இசையமைத்த மூன்று படங்களின் பாடல்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்

அபூர்வ சகோதரிகள் 

1982 ஆம் ஆண்டு 'டிஸ்கோ டான்சர்’ ஹிட் அடித்த கையோடு பப்பி லஹரியை, நமது தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்து அழகு பார்த்தனர் கோலிவுட் ரசிகர்கள். இந்தப் படத்தில் இவர் ஆறு பாடல்களுக்கு இசையமைத்தார். அந்த  ஆறு பாடல்களுக்கும் குரல் கொடுத்தது எஸ்பிபியும், ஜானகியும். படம் பெருமளவு வரவேற்பு பெறாததால் இப்படத்தின் பாடல்களும் சற்று தொய்வை தான் சந்தித்தது.

பாடும் வானம்பாடி 

முதல் படம் கை கொடுக்காத காரணத்தால் இவரின் இந்தி ஹிட்டான "டிஸ்கோ டான்சர்" படத்தை தமிழில் ரீமேக் செய்தனர். இந்த முறை கையில் எடுத்தது ரீமேக் என்பதால் அவருக்கு அந்த படம் கை கொடுத்தது. அவருடைய "ஐ அம் ஏ டிஸ்கோ டான்சர்" இங்கு "நான் ஒரு டிஸ்கோ டான்சர்" என வெளியாகி ஹிட் அடித்தது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா

மூன்றாவதாக பப்பி இசை அமைத்த திரைப்படம் கன்னட திரைப்படமான " ஆபிரிக்கடள்ளி ஷீலா" என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்த  படம் போதிய வரவேற்பு பெறாததால் இவரது இசையும் இங்கு பிரபலமாகமலே மாறிப்போய்விட்டது.

தமிழ் திரையுலகில் பெரிய வெற்றி என்ற ஒன்றை பெறாவிட்டாலும் இவரது இசையின் தாக்கமானது தமிழ் சினிமாவில் இன்றளவும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. 

அதற்கு எடுத்துக்காட்டாக 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் தரண் குமார் இசையில் வெளியான "போடா போடி" படத்தில் "ஐ அம் ஏ குத்து டான்சர் " என்ற பாடலின் கடைசி பகுதியில் பப்பியின் பாப்புலர் ஹிட்டான " ஐ அம் ஏ டிஸ்கோ டான்சர் " பாடலை "ஸ்பின் ஆஃப்" செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அந்தப் படத்தின் " டைட்டில் கார்ட்" பீஜியமாக பப்பியின் " நான் ஒரு டிஸ்கோ டான்சர்" என்ற பாடல் ஒலித்து இருக்கும்.

பப்பி லஹரி தமிழ் சினிமாவுக்கு தொண்டாற்றிய பணி என்பது சிறியதாகவே இருந்தாலும், இவரின் இசையின் தாக்கமானது அவர் பிரிந்த பிறகும் என்றும் நினைவில் இருக்கும் வல்லமை பெற்றது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி