தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanangaan: ‘வணங்கான் படத்தில் வைரமுத்து’..விறுவிறு படப்பிடிப்பு! அப்டேட் இங்கே!

Vanangaan: ‘வணங்கான் படத்தில் வைரமுத்து’..விறுவிறு படப்பிடிப்பு! அப்டேட் இங்கே!

Apr 01, 2023, 10:00 AM IST

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது முடிவடைந்து இருக்கிறது. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த முதற்க்கட்ட படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Aranmanai Collection: சுந்தர். சியின் அரண்மனை 4 கல்லா கட்டுச்சா.. முதல் நாள் வசூல் என்ன?

Aavesham OTT: ரூ.100 கோடி வசூல் செய்தும் ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வரும் ஃபஹத் ஃபாசிலின் ஆவேஷம்!

12 Years of Vazhakku Enn 18/9: நெஞ்சை ரணமாக்கும் க்ளைமாக்ஸ்! ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட நீதியை எதார்த்தமாக சொன்ன படம்

Trisha: இது தான் விஷயம்.. வருண், த்ரிஷா காதல் முறிவுக்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்கா?

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

முன்னதாக நந்தா, பிதாமகன் உள்ளிட்ட ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றிய இயக்குனர் பாலா- நடிகர் சூர்யா கூட்டணி, சிறிய இடைவெளிக்குப் பின் வணங்கான் படத்தில் இணைந்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், அதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்த நிலையில், அது தொடர்பான அடுத்தடுத்த சர்சைகள் வெளியாகிக் கொண்டிருந்தன. 

குறிப்பாக, படப்பிடிப்பை பாலா இழுத்தடிப்பதாகவும், எடுத்த காட்சிகளை திரும்ப திரும்ப எடுப்பதாகவும், இதனால் சூர்யா அப்செட்டில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஒரு கட்டத்தில் வணங்கான் படம் ட்ராப் ஆவதாக செய்தி வந்த போது, நடிகர் சூர்யா அதை மறுத்து, ட்விட் ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் சூர்யாவை வைத்து எடுக்க இருந்த வணங்கான் ட்ராப் ஆவதாக பாலா அறிக்கை விட்டார். இதற்கு பதிலளித்த சூர்யா தரப்பு ‘பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் வணங்கான் படத்தை அருண்விஜயை வைத்து பாலா எடுத்து வருகிறார். 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.