தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baakiyalakshmi: மாலினி விரித்த மோக வலை.. பழனிசாமி பூசிய சந்தனம்.. கடுகடுத்த கோபி.. பா.,லட்சுமி சீரியல் இன்றைய நிகழ்வு!

Baakiyalakshmi: மாலினி விரித்த மோக வலை.. பழனிசாமி பூசிய சந்தனம்.. கடுகடுத்த கோபி.. பா.,லட்சுமி சீரியல் இன்றைய நிகழ்வு!

Aug 25, 2023, 03:07 PM IST

google News
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலின் பிரதான கேரக்டர் கோபி. இவர் தனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது என்பதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனைவி பாக்யா தனி மரமாக நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

அடிப்படையிலேயே அப்பாவி குணம் கொண்ட பாக்யா கோபி சென்ற பிறகு கேண்டீன், சமையல் ஆர்டர், கல்லூரி படிப்பு என தன் வாழ்க்கையை முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டு செல்கிறாள். இந்த பாதையில் பாக்யாவுடன் பள்ளியில் படித்த பழனிசாமியும் சேர்ந்து உறுதுணையாக நிற்கிறான்

இதனைப்பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத ராதிகாவும், கோபியும் அவளின் முன்னேற்றத்திற்கு முட்டைக்கட்டை போட முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியும், அதனை பாக்யா எப்படி வென்று வருகிறார் என்பதுதான் தற்போதை டாப்பிக்காக பாக்கியலட்சுமி சீரியலில் போய் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் செழியன், மாலினியின் கைப்பிடித்து ஆறுதல் கூறியதோடு முடிந்தது. 

இந்த நிலையில் இன்றைய எபிசோடில், செழியன் மனைவி ஜெனிக்கு வளைகாப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் நடக்க, பழனிசாமி உட்பட மொத்த குடும்பமே ஒன்று கூடுகிறது. ஆனால் ஜெனி அப்பா மட்டும் மிஸ்ஸிங். இதனை குட்டு வைத்து பாக்யா அப்பா சொல்ல, முயற்சி பண்ணினார்.. ஆனால் முடியவில்லை என்று பெருமூச்சு விடுகிறார் ஜெனி அம்மா!

மொத்த குடும்பமே வளைகாப்பு மோடியில் இருக்க செழியனுக்கு மெசேஜ் அனுப்புகிறாள் மாலினி. மாலினின் புது விதமான சொந்தம் கொடுத்த போதையில் அதிலேயே கவனம் செலுத்துகிறான் செழியன். 

இதனை பார்த்த மொத்தக்குடும்பமும் ஒவ்வொருத்தராக கண்டிக்க, திறு திறுவென்று முழித்துக்கொண்டே வளைகாப்பு வேலைகளை மும்மரமாகிறான் அவன். 

ஒவ்வொருத்தராக ஜெனிக்கு சந்தனம் பூச, பழனிசாமியும் நலங்கு வைக்கிறார். இந்த நேரத்தில் கோபி தன்னுடைய குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு வருகிறார். ராதிகாவை பார்த்த பாக்யா குடும்பம் கடுகடுக்கிறது. 

ஒரு வழியாக கிஃப்ட்டை கொடுத்து தன்னுடைய கடமையை முடிக்கிறார் கோபி. அதனைத்தொடர்ந்து ஜெனி அம்மாவிற்கு வீட்டிற்குச் செல்லும் போதும் நான் இங்கேயே இருந்து விடட்டுமா அம்மா.. என்று சொல்லி கண்கலங்குகிறாள். அத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

 

 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி