தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய்க்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்… ஏன் தெரியுமா?

விஜய்க்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்… ஏன் தெரியுமா?

Aarthi V HT Tamil

Jul 02, 2022, 11:02 AM IST

google News
நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அர்ஜுன் தாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அர்ஜுன் தாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அர்ஜுன் தாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனித்துவமான குரலின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். இவர் கார்த்தி நடித்த கைதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் எதிற்மறையான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் இந்தியில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடிக்கவுள்ளார். 

இந்தப் படத்தை கே.டி.கருப்புதுரை படத்தை இயக்கிய மதுமிதா இயக்குகிறார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதில், “எனது முதல் இந்திப் படம். எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. உணர்வுகள் கொப்பளிக்கின்றன. முதலில் லோகேஷ் சாருக்கும், விஜய் சாருக்கும் பெரிய நன்றி. 

இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், உங்கள் இருவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். நான் ஏன் இவர்களுக்கு நன்றி சொல்கிறேன் என உங்களில் பலரும் ஆச்சர்யப்படலாம்.

உண்மை என்னவென்றால், மாஸ்டரில் நடிக்காமல் போயிருந்தால், நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேனா எனத் தெரியவில்லை. அதனால் மீண்டும் லோகேஷ் சார், விஜய் சார் மற்றும் மாஸ்டர் குழுவினருக்கு நன்றி. 

இந்தப் படத்தில் கையெழுத்திட்டதும், அதைப்பற்றி என் பெற்றோர், விஜய் சார், லோகேஷ் சார் மற்றும் விக்னா சாரிடம் மட்டுமே கூறினேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 

 

 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி