தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ’அரபிக் குத்து ‘ பாடல் செய்த சாதனை!

’அரபிக் குத்து ‘ பாடல் செய்த சாதனை!

Aarthi V HT Tamil

Apr 01, 2022, 08:13 PM IST

google News
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ பீஸ்ட் ‘ படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூ-டியூப் தளத்தில் சாதனை படைத்து உள்ளது .
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ பீஸ்ட் ‘ படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூ-டியூப் தளத்தில் சாதனை படைத்து உள்ளது .

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ பீஸ்ட் ‘ படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூ-டியூப் தளத்தில் சாதனை படைத்து உள்ளது .

தளபதி விஜய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் , ’ மாஸ்டர் ‘ . இவர் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் , ‘ பீஸ்ட் ‘ படத்தில் நடித்து உள்ளார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் அத்துடன் படத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ , செல்வராகவன் , அபர்ணா தாஸ் யோகி பாபு ,

உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் . படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது .

இது வரை ‘ பீஸ்ட் ‘ படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் பாடலான ' அரபிக் குத்து ‘ பாடல் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியானது . நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதி உள்ளார் .

பாடல் வெளியீட்டின் போது அனிருத் , படத்தின் இயக்குநர் நெல்சன் , நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் விஜய் போனில் பேசுவது போன்று புரோமோ வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ' அரபிக் குத்து ‘ பாடல் தற்போது வரை யூ -டியூப் தளத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து உள்ளது. அதேபோல் அந்த பாடலை 5 மில்லியன் நபர்கள் லைக் செய்து இருக்கின்றனர். இதன் மூலம் 250 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அதிவேகமாகச் சாதனை படைத்த தென்னிந்தியப் பாடல் என்ற என்ற பெருமையை ' அரபிக் குத்து ‘ பாடல் பெற்று உள்ளது .

மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை ( ஏப்ரல் 2 ) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி