Aneethi: அர்ஜூன் தாஸ் படத்தை வெளியீடும் இயக்குநர் ஷங்கர்
Dec 18, 2022, 05:19 PM IST
அநீதி படத்தின் வெளியீடு உரிமையை இயக்குநர் ஷங்கரின் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த பாலன் இயக்கிய ஜெயில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது அடுத்த படைப்பான ‘அநீதி’ பட படப்பிடிப்பு நிறைவடைந்து. இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதில் நடித்த அர்ஜூன் தாஸ் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்து அசத்தி இருக்கிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து கவனம் பெற்ற துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார்.
இதில் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். அவர்கள் மட்டுமில்லாமல் நாடோடிகள் பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, இயக்குநர் எஸ்.கே. ஜீவா, அர்ஜூன் சிதம்பரம், நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சதீஷ் குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமல் முழுக்க படப்பிடிப்பிலேயே கவனம் செலுத்தியது படக்குழு. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் தலைப்பை படக்குழு வெளியிடப்பட்டது.
பட தலைப்பை அறிவிக்கும் வகையில் படத்தின் சிறிய டீஸர் ஒன்றையும் வெளியிட்டது படக்குழு. ‘அநீதி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். அநீதி படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்த பாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியது மட்டுமின்றி கதை, திரைக்கதையையும் எழுதி உள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் உரிமத்தை முன்னணி இயக்குநர் ஷங்கர் கைப்பற்றியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாபிக்ஸ்