தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 நாள் ஆகியும் தமிழ்நாட்டில் அமரனுக்கு குறையாத மவுசு.. நேற்று ஒரே நாளில் 11 கோடிக்கும் மேல் வசூல்..

10 நாள் ஆகியும் தமிழ்நாட்டில் அமரனுக்கு குறையாத மவுசு.. நேற்று ஒரே நாளில் 11 கோடிக்கும் மேல் வசூல்..

Nov 10, 2024, 08:53 AM IST

google News
ராணுவ வீரரின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.
ராணுவ வீரரின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

ராணுவ வீரரின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.

படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படத்திற்கு பல இடங்களில் இருந்தும் எதிரப்பு கிளம்பி வரும் நிலையில் மக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வசூலை அதிகரித்துள்ளனர்.

படத்திற்கு தொடர்ந்து வரும் மிரட்டல்

அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை, விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

இதையடுத்து, அமரன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கள் முன் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தியேட்டர் முன் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், படம் பார்க்க வரும் ரசிகர்கள் சற்று பதற்றத்துடனே தியேட்டருக்குள் செல்கின்றனர்.

வசூலில் கெத்து காட்டும் அமரன்

அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 6 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 11.75 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 110.6 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

இந்திய அளவில் பார்க்கும் போது படம் 10 நாட்களில் 136.75 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 197.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது. இதன் மூலம் வார நாட்களிலும் அமரன் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.

இராணுவ வீரரின் உண்மைக் கதை

இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்

நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி