மேஜர் முகுந்த் ஆக முழுதாக மாறி நின்ற எஸ்.கே.. நிறைய இடங்களில் கூஸ்பம்ப்ஸ்.. வெளியான அமரன் ட்ரெய்லர்!
மேஜர் முகுந்த் ஆக முழுதாக மாறி நின்ற எஸ்.கே.. நிறைய இடங்களில் கூஸ்பம்ப்ஸ்.. வெளியான அமரன் ட்ரெய்லர் பற்றி காண்போம்.

அமரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் வெளியானது.
சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்கே 21 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. அதில் படத்தின் பெயர், அமரன் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும், குடும்ப உறுப்பினர்களைக் கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த அமரன் படத்தில் முழுக்க அதிரடி ஹீரோவாக தோன்றியுள்ளார்.
அமரன் கேரக்டரில் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன்:
ராணுவ வீரர் போல் உடல் கட்டமைப்பைப் பெறுவதற்காக, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, கடும்பயிற்சியை சிவகார்த்திகேயன் மேற்கொண்டார். படம் தொடங்கப்படும்போது, சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்து, அவரை உற்சாகப்படுத்தினர்.
இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவினை சாய் என்பவர் செய்துள்ளார். எடிட்டிங்கினை கலை கலைவாணன் புரிந்துள்ளார். ஆக்ஷன் திரைப்படத்தை ஸ்டீஃபன் ரிச்டர் செய்துள்ளார். கலைப்பணியை பி.சேகரும், நடன அமைப்பினை ஷெரிஃப்பும் செய்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்:
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முடிந்த ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. அதன் பின்னர், போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஐந்து மொழிகளிலும் பரவலான வரவேற்பினைப் பெற்று வருகிறது.
அமரன் படத்தின் பட்ஜெட் என்ன?; சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?:
இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாகத் தெரியவருகிறது. மேலும், நவரச நாயகன் கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதிபெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், இன்னும் பெயர் சூட்டாத தனது 23ஆவது படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி, இப்படத்தைத் தொடர்ந்து, ’தண்டேல்’ என்னும் படத்தில் சத்யா என்னும் கேரக்டரிலும், இந்தியில் ரன்பீர் கபூருடன் ராமாயணாவில் சீதாவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

டாபிக்ஸ்