Alia-Ranbir Baby Girl: பெண் குழந்தைக்கு தாயான ஆலியா பட்
Nov 06, 2022, 02:53 PM IST
ரன்பீர் -ஆலியா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பை: பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அவர்களின் வீட்டிற்கு புதிய விருந்தினர் வந்துள்ளார்.
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஏப்ரல் 14, 2022 அன்று நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடி திருமணத்திற்கு முன்பு பல ஆண்டுகள் டேட்டிங் செய்தனர். இவர்களது திருமண விழாக்கள் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக இடம்பெற்றன.
இவர்கள் கடந்த ஜீன் மாதம் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறி அடுத்த இன்ப அதிர்ச்சியை தந்தனர்.
இந்நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஜோடியான ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்