Ajithkumar: ‘சாரி பாவனா.. அய்யோ பிரச்சினை இல்ல’ - அசல் நடிகையிடம் அஜித் கேட்ட மன்னிப்பு! - காரணம் என்ன தெரியுமா?
Dec 25, 2023, 08:39 AM IST
ஆமாம், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகர் அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கே பாவனா வர.. அவரிடம் அஜித், கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா, அஜித்துடன் 5 ஆவது முறையாக இணைந்திருக்கிறார்.
இந்தப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகர்கள் அர்ஜீன், ஆரவ், நடிகை ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் நிலையில், நடிகை பாவனா நடிகர் அஜித்தை சந்தித்து இருக்கிறார்.
ஆமாம், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகர் அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கே பாவனா வர.. அவரிடம் அஜித், கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இவர்கள் இருவரும் முன்னதாக அசல் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது!
முன்னதாக, விடாமுயற்சி தலைப்பு அறிவித்து நீண்ட நாட்கள் ஆன பின்னரும், படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆகையால், இந்தப்படம் கைவிடப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே, சந்திரமுகி 2 நிகழ்ச்சியில் பேசிய இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விடாமுயற்சி படம் கைவிடப்பட வில்லை. இது எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம் என்று கூறினார்.
இந்தப்படத்தில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் இணைந்து பணியாற்றிய ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தெறி படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத், இந்தப்படத்தில் அஜித்துடன் இணைந்திருக்கிறார்.
டாபிக்ஸ்